Header Ads



நெடுந்தீவில் பெரு வெற்றியளித்துள்ள, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

(ச.ஜெயபாலன்)

யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் 102 மில்லியன் ரூபா நிதியுதவில் நெடுந்தீவு அமைக்கப்பட்டு வெற்றிகண்டிருக்கும் கடல் (உவர்) நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் இன்றைய யாழ்.குடாநாடு எதிர்நோக்கும் சுகாதாரமான நீர்ப்பிரச்சினைக்hகான  திறவுகோளாக அமைந்துள்ளது.

நெடுந்தீவு பிரதேசம் 8 கி.மீ நீளத்தையும் 6 கி.மீ அகலத்தையும் கொண்ட 48 சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடைய ஒரு தீவு மட்டுமன்றி ஏனைய தீவுகளை விட கடற்பரப்பில் அதிக தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பின்தங்கிய இடமாகும். 

இத் தீவின்  நன்னீர் கிடைக்கும் ஒரே ஒரு மூலமாக சாராப்பிட்டி மற்றும் மணற்கிணறு என்பனவே காணப்பட்டதுடன் அவற்றில் இருந்து கிடைக்கும் நீரும் குறிப்பிட்ட காலத்திற்கே குடிப்பதற்கு உகந்ததாக காணப்பட்டது.
இத்தீவின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கும் முகமாக பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொள்கலன்களில்; அடைத்து நாளாந்தம் படகு மூலம் நெடுந்தீவுக்கு அனுப்புவதே சிறந்ததாகக் கருதப்பட்டது. குறிகாட்டுவானில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அல்லது 7 கடல் கி.மீ தூரத்தில் கடலின் வழியே நெடுந்தீவுக்கு குழாய் வழி நீர் விநியோகம் சாத்தியமற்றதாகக் காணப்பட்டமையே இதற்குக் காரணமாகும். இங்கு நீர் குழாய்களைமைப்பது மற்றும் அதில் பழுது ஏற்படும் போது அதனைக் கண்டறிந்து திருத்தம் செய்வது என்பது பொறியியலாளர்களைப் பொறுத்தவரை பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது. 

ஆயினும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு நெடுந்தீவுக்கு குடிநீரை வள்ளத்தில் அல்லது தோணியில் அனுப்பிக் கொண்டிருப்பது? இதற்கான செலவீனங்கள் காலநிலை மாற்றம், போக்குவரத்துப் பிரச்சினை மற்றும் ஆளணிப் பிரச்சினை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நெடுந்தீவுக்கான கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டம் சிறந்த ஒரு திட்டமாக முன்மொழியப்பட்டது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐப்பானிய வறுமைமைத்தணிப்பு நிதியம், வடமாகாண சபை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை என்பவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நெடுந்தீவின் இறங்குதுறைக்குச் சமீபமாக பிடாரிமுனை எனும் இடத்தில் கடல் நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு இன்று நெடுந்தீவில் உள்ள  4,530 பேருக்கு போதுமான குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.

102 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்தநிலையத்தினூடாக நாளாந்தம 50 கியூபிக் மீற்றர்கள் (50ஒ 1000 ஸ்ரீ 50இ000 லீற்றர்கள்) நன்னீர் உற்பத்தி செய்யப்பட்டு  நெடுந்தீவு மக்களின் குடிநீர்த்; தேவைக்குப் போதுமான நன்னீர் வழங்கப்படுவதன் ஊடாக இத்திட்டம் வெற்றிகண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் இதன் உற்பத்தித்திறனை 100 கன மீற்றர்களாக அதிகரிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நீர் இலங்கைதர நிர்ணய சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தரத்தினை (ளுடுளு 614:2013 Pரடிடiஉயவழைn) விட சிறந்தது மட்டுமன்றி உலக சுகாதார தர நிர்ணயத்துடனும் ஒத்துப்போகின்றது.

மேலும் இச் செயற்பாடானது நாளாந்தம் துறைசார் வல்லுனர்களின் கண்காணிப்பினூடே விநியோகிக்கப்படுவதுடன் உற்பத்தியின் பின்னர் ஏற்படும் கிருமித் தொற்றுக்களையும் நீக்கும் பொருட்டு குளோரின் கலக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 

தற்போதுஇயங்கிவரும் இப்பொறியிலிருந்து மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தரையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்தும் குழாய் மூலமான விநியோகம் ஊடாகவும் பெற்றுக்கொள்கின்றனர். வெகு விரைவில் வீடுகளுக்கான குழாய் வழி குடிநீர் விநியோகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆராய்வோமெனில், 
இத்திட்டம் ஆராம்பிக்கப்படும் போது கடற்றொழிலாளர்கள் மத்தியில் அது குறித்த பூரண தெளிவின்னை காணப்பட்டது. இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் மிக மோசமாகப் பாதிப்கப்படும் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் மேலோங்கிருந்தது.

இந்நிலையில் இத்திட்டம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் கடற்றொழிலாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான ஏனைய முறைமைகளை விட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும் தற்போது வெற்றியளித்துள்ள இத்திட்டம் குறித்து அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.