Header Ads



யகீன் மொடல் ஸ்கூலில், உலமாக்களுக்குரிய இலவச முகாமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு

-அல்ஹாபிழ் மௌலவி ஷியாம் Fபவ்சர் (ஹுமைதி) -

தாம் வேலை செய்யும் இடங்களில் எவ்வாறு நிர்வாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வது என்ற தொனிப்பொருளில் உலமாக்களுக்கான ஒரு விசேட முகாமைத்துவ பயிற்சி நெறி அக்குறணை யகீன் மொடல் ஸ்கூலில் நடை பெற ஏற்பாடு   செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் மேற்படி கருத்தரங்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 8:30  மணி முதல் நண்பகல்  12:00  மணி வரை நடைபெறும்.

5 கட்டங்களாக  நடை பெற இருக்கும் இந்த முகாமைத்துவ செயலமர்வு பங்கு பற்றுவோரில் விரைவான மாற்றங்களை உண்டாக்கக்கூடிய முறையில் செயல் ரீதியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்பு இறைவனருளால் உலமாக்களுக்கேற்ற முறையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

யகீன் மொடல் ஸ்கூலின் சமூக சேவைப் பிரிவின் (CSR) ஒரு பகுதியாக இந்தப் பெறுமதியான செயலமர்வை உலமாக்களுக்கு இலவசமாக நடத்துவதற்கு அதன் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்

இச் செயலமர்வின் விரிவுரைகள் யகீன் குழுமத்தின் தலைவர்

Mohamed Fahmy Farook
MBA (UK)(Merit) , CIMA (UK), BSc (Hons.) (SL), Diploma in Psychological Counselling (SL)
Senior Management Lecturer, Business Trainer and Consultant அவர்களால் நிகழ்த்தப்பட விருக்கின்றன.

எனவே இவ்வரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் உலமாக்கள்  தங்கள் வருகையை முற்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர். இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சகோதரர் பிர்தௌஸ் ரிZஸான்

0778 400 600 அல்லது 0812 301 401

மின்னஞ்சல் : yaqeenschool@gmail.com

No comments

Powered by Blogger.