பௌத்தர்களையும், கத்தோலிக்கர்களையும் வரப்பிரசாதங்களை காண்பித்து மதம் மாற்றுகின்றனர்
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயார் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலவந்தமான அடிப்படையில் மதமாற்றம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்த நிலைப்பாடு எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்
கத்தோலிக்க பேராயர் சபையின் நிலைப்பாடு எனது நிலைப்பாட்டுக்கு முரணானதாக இருக்கலாம்.
சிங்கள மற்றும் கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.
சில அடிப்படைவாதிகள் இதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படைவாதிகள் கத்தோலிக்கர்கள் அல்ல.
இவர்கள் பௌத்தர்கள் மட்டுமன்றி கத்தோலிக்கர்களையும் சில வரப்பிரசாதங்களை காண்பித்து மதம் மாற்றி வருகின்றனர்.
எனவே, பலவந்த அடிப்படையில் மாத மாற்றம் செய்யப்படுவதனை தடுக்க சட்டமொன்று கொண்டு வரப்படுவதனை தனிப்பட்ட ரீதியில் நான் எதிர்க்கவில்லை என கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

As Muslims, we support to that law. Anybody should not convert anyone by force.
ReplyDeleteWho Are They ?
ReplyDeleteBy force... Who convert ? How Hindus in North are changed to another religion ? Who are behind this conversion ? what is he trying to tell by hiding their agenda of conversion..
No conversion by force is allowed and should not be allowed BUT
As as FREE Citizen.. One can chose to be into any religion.. Once they come to know truth of this life given by The GOD who is alone worthy of being worshiped.
பணம் கொடுத்து மதம் மாற்ற முற்பட்ட சம்பவம் ஒன்றை நானும் அண்மையில் அறிந்து கொண்டேன். யேசுநாதரின் படத்தை வீட்டுக்குள் தொங்கவிட்டால் சில இலட்சங்கள் தருவதாக பாதிரியார் கூறினாராம்.
ReplyDeleteஅவர் கண்ணாடி முன்னின்று பேசி இருக்கின்றார் போலும்!
ReplyDeleteமுழு உலகமும் மிஷனரிகளைப்பற்றி நன்கு அறிந்து வைத்த ஒன்று. இவர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார்.