எர்துகானை வரவேற்கமாட்டோம் - ஜேர்மன் ஜனாதிபதி அறிவிப்பு
ஜெர்மனி அரசை நாஜிக்களுடன் ஒப்பிட்டு எல்லை மீறிய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எரிதுவான் ஜெர்மனியில் வரவேற்கப்பட மாட்டார் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்ஜலா மேர்கல் தெரிவித்தார்.
துருக்கி அரசியல் பேரணிகளை தடுத்த ஜெர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை எர்துவான் நாஜிக்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து பேசியது இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்தன்பூலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் எர்துவான் கூறியதாவது, “ஜெர்மனியில் வாழும் எனது சகோதரர்கள், எனது அமைச்சர்கள் மற்றும் அங்கு சென்ற எம்.பிக்களுக்கு எதிரான மேர்கல், நீங்கள் தற்போது நாஜி முறைகளை கையாண்டு வருகிறீர்கள்” என்றார்.
துருக்கி புலம்பெயர் மக்களின் பேரணி ஒன்றில் பங்கேற்க எர்துவான் ஜெர்மனி விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment