Header Ads



ஷஹித் ஷேக் அஹமது யாசின், நினைவுதினம் இன்று...!


-Amd Ismail-

பாலஸ்தீன் போராளிய இயக்கம் ஹமாசின் நிறுவனர் ஷேய்க் அஹமத் யாசின் அதிகாலை தொழுகையை முடித்து விட்டு வெளி வரும்போது, இஸ்ரேலிய ஹெலிகாப்டர் மூலமாக கொலை செய்யப்பட்ட தினம் இன்று. (March 22, 2004.)

அவருடன் சேர்ந்து இன்னும் ஆறு நபர்களும் ஷஹீதாக்கப்பட்டனர்.

துரதிஷ்டவசமாக , உலகில் பல்வேறு நாடுகளில் தம் உரிமைக்காக போராடும் மக்களில், யார் போராளிகள் - யார் தீவிரவாதிகள் என்பதை மீடியாக்களும்,  நம் புரிதல்களும், சுய விருப்பு -வெறுப்புகளுமே இன்னமும் தீர்மானித்து கொண்டிருக்கிறது.!!

பல்லாண்டு காலமாய் சொந்த நாட்டில், திறந்த வெளி சிறைச்சாலைக் கைதிகளாய் வாடிக் கொண்டு இருக்கும் பலஸ்தீன மக்களுக்கு இனியேனும் விடிவு காலம் பிறக்கட்டும்.

உலகில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்புக்களும், படுகொலைகளும் அரங்கேற்றப் படுகிறதோ, அப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றும் கொடியவர்களின் கரங்கள் பலம் இழக்கட்டும்.!!

பலவீனமான மக்களின் கரங்கள் பலம் பெறட்டும். நீதி வெல்லட்டும்.!! —

1 comment:

Powered by Blogger.