Header Ads



பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குவதில், இலங்கையர்கள் முதலிடம்

“ஆசிய, பசுபிக் வலயங்களில் இலங்கையர்களே பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குகின்றனர் என, ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

நாடாளுமன்றில் புதன்கிழமையன்று இடம்பெற்ற, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் ஆசிய, பசுபிக் வலயங்களில் அண்மையில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை, “மக்களும் ஊழலும் ஆசிய -பசுபிக்” என்ற தலைப்பில் கடந்த 7ஆம் திகதி வெளியிட்டது. 

அதில் பொது பாடசாலைகள், நீதிமன்றங்கள் மற்றும் பயன்பாட்டு வழங்குநர்களுக்கு இலங்கையர்களே அதிக இலஞ்சம் வழங்குவதாகவும் 17 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இலங்கை 17சதவீதம் இலஞ்ச அளவைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது” என்றார். 

1 comment:

  1. இதிலிருந்து என்ன விளங்குவது என்ன என்றால் இலங்கை பொலிஸ் தான் most currupted police force in South Asia.

    ReplyDelete

Powered by Blogger.