Header Ads



முஸ்லிம் பிரதேசத்தில், மதுபான உற்பத்திற்கு அனுமதி வழங்கியது யார்..?


சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அமைய, அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு கல்குடாவில் புதிய மதுபான உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்கின்றமை அண்மையில் தெரியவந்தது.

W.M.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிலையத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, அர்ஜூன் அலோசியஸே அதன் தலைவராக செயற்படுகின்றார்.

இவர் மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனாவார்.

முறிகள் மோசடியின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 15,000 மில்லியன் ரூபாவை நாடு இழந்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி கொடுக்கல் வாங்கலூடாக நாடு பெருமளவிலான நிதியை இழந்துள்ளது.

அவ்வாறான நட்டத்தை நாட்டிற்கு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் அர்ஜூன் மகேந்திரனுக்கு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட நிதியமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், மதுபான உற்பத்தி நிலையத்திற்கான அரச அனுமதி எவ்வாறு கிடைத்தது?

நிலைமை இவ்வாறிருக்க, பேர்ப்பச்சுவல் நிறுவனம் தமது பணத்தை ஊடக நிறுவனங்களை ஆரம்பிப்பதற்காக முதலீடு செய்வதால் நாட்டின் ஏனைய இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் அச்சம் அடைந்துள்ளதாக பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. so if the bar is situated in area where socalled muslims are living, they will not go to bar?

    very good logic.keep it up ilankai sonihala

    ReplyDelete

Powered by Blogger.