Header Ads



இலங்கையில் பணக்காரர்களின் எண்ணிக்கை கிடுகிடு என உயர்வு - கொழும்பில் பெரும் சொத்துக்கள்


எதிர்வரும் 10 வருடங்களில் இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரில் வாழும் பணக்காரர்களின் எண்ணிக்கை 160 வீதம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சொத்து ஆலோசனை சேவைகள் நிறுவனமாக Knight Frank னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தசாப்தத்தில் கொழும்பு நகரில் 30 மில்லியன் டொலர் அல்லது 45 பில்லியன் ரூபாயக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கோரும் நபர்களின் எண்ணிக்கை 182 ஆகும் என இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு வரையில் இலங்கையின் கொழும்பு நகரத்தில் வாழும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு பதிவாகிய 70 பேரில் 160 முதல் 182 வீதம் வரை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வளர்ச்சிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஒரு தசாப்த்தத்தில் வியட்நாம் நாட்டின் சி மின் நகரம் முதல் இடத்தை வகிக்கிறது. 30 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களுடன் மதிப்பிடும் போது அதிக வளர்ச்சியை வெளிப்படுத்தும் நாடாக இலங்கை இரண்டாமிடம் கிடைக்கும் என Knight Frank இன் கருத்தாகும்.

Knight Frankஇனால் வெளியிடப்பட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான அறிக்கைக்கமைய கொழும்பு நகரத்திகுள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிமை கோரும் 3400 பேர் வாழ்வதாக குறிப்பிடப்படுகின்றது. அவற்றில் 170 பேர் ஒரு கோடி டொலருக்கும் (10 மில்லியன்) அதிகமான சொத்துக்களுக்கு உரிமை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்களில் 70 பேர் பிரபல பணக்காரர்கள் பட்டியலில் இணைகின்ற நிலையில் அவர்களில் ஒருவரின் சொத்துக்களின் பெறுமதி 30 மில்லியன் டொலருக்கு அதிகமாகும்.

கொழும்பு நகரத்தின் நிலைமை இவ்வாறு காணப்படுகின்ற நிலையில் முழுமையாக இலங்கை தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய 2026ஆம் ஆண்டு வரையில் இலங்கையினுள் வசிக்கும் ஒரு மில்லியன் டொலருக்கு உரிமைக் கோரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாகும். 2015ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,200 எனவும், 2016ஆம் 5000 பேர் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் உள்ள 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான நபர்களின் எண்ணிக்கை 26 ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் என்பது கிட்டத்தட்ட 15 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். எப்படியிருப்பினும் எந்தவொரு இலங்கையரும் ஒரு பில்லியன் டொலருக்கு உரிமையாளர்களாக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு, சொத்து பங்கு சந்தை முதலீடு உட்பட அனைத்து பொருட்களின் பெறுமதிக்கமைய இந்த நபர்களின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.