ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி, பயன் கிட்டுமா..? றிசாத் பதில் தருவாரா..??
வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குபெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் கஸ்டங்களின் மத்தியிலே தமது பூர்வீக காணிகளில் குடியேறியிருக்கும் முசலிப் பிரதேச மக்களுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலால் அவர்களது சுயாதீனமான இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளும், மேய்ச்சல் தரை நிலங்களும், குடியிருப்பு காணிகளில் ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை பிழையானது.
கடந்த அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கையினாலேயே தங்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு முஸ்லிம்கள் முழுப்பங்களிப்பையும் நல்கினர்.
ஆட்சி மாற்றத்தை வேண்டி தங்களது உயிரையும் துச்சமென மதித்து எதையுமே பொருட்படுத்தாது முன்னின்று உழைத்த இந்த முஸ்லிம் சமூகத்தை இனவாதிகள் தொடர்ந்தும் கொடுமைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.
முஸ்லிம் சமூகத்தை காடழிக்கும் சமூகமாகக் காட்டி இனவாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிழையான நடவடிக்கைகளுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த வர்த்தமானிப் பிரகடனத்தை நாம் பார்க்கின்றோம்.
அதுவும் தாங்கள் ரஷ்யாவில் இருக்கும் போது இந்த வர்த்தமானிப் பிரகடனம் வெளியிடப்பட்டமை எமக்குக் கவலை தருகின்றது.
வில்பத்து இயற்கை சரணாலயத்தில் ஓர் அங்குல நிலத்தையேனும் அபகரிக்காத முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி வரும் இனவாதிகளுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் தீனி கிடைத்துள்ளது. எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய வர்த்தமானி அறிவித்தலால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ய உதவ வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Why can't Rishad take legal action against My3 and convey the matter to International ??
ReplyDeleteIs my3 a wolf in sheep's clothing ??
Why can't Rishad take legal action against My3 & convey this matter to International???
ReplyDeleteDoes my3 seem a wolf in sheep's clothing ???
Rishad must step down immediately from his portfolio to show his strong objection against this sinister move of this government.
ReplyDeleteWHAT ABOUT ALL THE BIG NOICES MADE BY THE ALL CEYLON MAKKAL CONGRESS. ANY WAY ALL THE TREES AND TIMBER CUT IN THE RAPING OF THE WILLPATTU RESERVE HAVE BEEN SOLD BY THE MANNAR/THARAPORAM TIMBER GANG WHO WERE OPERATING AN ILLICIT TIMBER SAWMILL IN THE MANNAR POLANARUWA ROAD. THE MAN IN CHARGE OF THIS OPERATION WAS A SIBLING OF THE HON. MINISTER. THE STATEMENT THAT THE TREES WERE CUT BY THE STATE TIMBER CORPORATION IS FALSE. FINALLY, THE POOR MUSLIMS DISPLACED MUSLIMS OF MANNAR HAVE BEEN TAKEN FOR A RIDE AND DECEIVED. THE MUSLIM VOTERS OF MANNAR HAVE STILL TO LEARN A LESSON FROM THESE DECEPTIVE, HYPOCRITICAL MUSLIM POLITICIANS, Insha Allah. .It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam. Convener - The Muslim Voice.