Header Ads



இன்றைய நவீன காதலை, இஸ்லாம் அனுமதிக்காது - சாபிர் ஹாசிம்

(JM.HAFEEZ)

ஒருவன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்வதன் ஊடாக அனேக பாவங்களில் இருந்தும் விபரீதங்களில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். பாhர்வையே பாவத்தின் தூண்டுகோளாகும். பாவத்திலிருந்து மீள்வதற்கு இஸ்லாம் காட்டும் ஒரு வழிதான் பார்வையை தாழ்த்திக்கொள்வதென்று அகில இலங்கை மஸ்ஜித் சம்மேளனத்தில் உதவிச்செயலாளரும், பிரபல யதார்த்த பூர்வ பயிற்றுவிப்பாளருமான (ரியலிட்டி ட்ரேனர்) சாபிர் ஹாசிம் தெரிவித்தார். (3.3.2017)

மடவளை மதீனா மத்திய கல்லூரியில் இடம் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் பொதை ஒழிப்பு தொடாபில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

பார்வையைப் பேணுவதில் இஸ்லாத்தில் தனி இடம் உண்டு. எவன் அதனை மீறுகின்றானோ அவன் சகல பாவங்களுக்கும் உற்படும் நிலை ஏற்படுகிறது. தீய காட்சிகளை ஒரு முறை இரு முறை எனப் பார்க்கும் போது அதனூடாக அவன் ஈர்க்கப்பட்டு ஏனைய பாவங்களுக்கு காரணமாக மாறுகிறது. 

தனது தாயின் முகத்தைப்பாhத்து முறையாகக் கதைப்பவனுக்கு தாயுள்ளம் பற்றி மகிமை ஏற்படும். தீய பார்வை ஏற்படாது. எனவே தான் தாயின் முகத்தைப் பார்ப்பது கூட நன்மை என இஸ்லாம் கூறுகிறது. இதே விதம் நிறையக் கூறலாம்.

ஒருவன் வழிய வழிய வந்து உதவி செய்யும் போது சிந்திக்கவேண்டும். அவனில் ஏதோ கபடம் மறைந்திருக்கும். இன்று அதிகமான சிறுவர் துஷ்பிரயோகம், பெண்பாலியல் முயற்சிகள், போதைப் பொருள் அறிமுகம் போன்ற விடயங்களில் வழிய வழிய வந்து உதவியவர்களே வழி கெடுத்த சம்பவங்களே அதிகம் உண்டு. ஆனால் இங்கு தமது உடன் பிறப்புக்கள் அல்லது தாய் தந்தையர்களின் உடன் பிறப்புக்கள் போன்றவர்கள் விதி விலக்காக இருக்கலாம். வெளியார் விடயத்தில் மிக்க கவனதாக இருக்க வேண்டும். 

இன்று அதிக அனாச்சாரங்களுக்கு காதல் என்ற ஒரு மாயை காரணமாகிறது. இதனை தொலைக்காட்சி நாடகங்கள் மிக கச்சிதமாக ஊக்கு விக்கின்றன. ஆனால் ஒரு யுவதியும் இளைஞனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது என்பது இஸ்லாத்தில் இல்லை. காதலித்தல் என்பது இஸ்லாமிய பார்வையில் ஹராமாகும். கண்ணால், நாவால், செவியால் உள்ளத்தால் விபச்சாரம் செய்வதே இன்றைய நவீன காதலாகும். விபச்சாரம் ஹராமாக்கப்பட்டது. எனவே  இன்றைய நவீன காதலை இஸ்லாம் அனுமதிக்காது. ஏனெனில் ஒருவரை ஒருவர் விரும்புவது வேறு, உள்ளத்தாலும் புலனுறுப்புக்காளலும் செய்யும் விபச்சாரம் வேறு. நாம் குறிப்பிடும் இன்றை காதலில் இவை இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது. 

நாம் ஒருவருடன் பழகும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நண்பராக யார் இருக்கின்றாரோ அவரது இயல்புகள் எம்மிடம் வந்து விடும். அவராக(நண்பராக) நாம்மாறாத வரையில் அவருடன் ஒத்துப் போக முடியாது. அதே நேரம் நண்பன் செய்த தவறுக்காக நாமும் மாட்டிக்கொள்ள வேண்டி வரும். 

கூட்டுக் கல்வி, இளம் வயது மாற்றுப்பாலினர்கள் சந்தித்துக் கொள்வது, தொலைபேசி உரையாடல்கள், நவீன தொடர்பு யுத்திகளும் விடியோ காட்சிகளும்  போன்ற நிகழ்வுகள் பாவத்தின் பால் தூண்டப்படுகிறது. பின்னர் அது ஆசையைத் தூண்டுகிறது. பின்னர் விபரீதங்களில் போய் முடிகிறது. இது போன்றவைகள் போதைக்கு முதற் கட்டமாகிறது என்றார்.

மடவளையில் போதை ஒழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுக் குழுவினர் இதனை ஒழுங்கு செய்திருந்தனர். சுமார் 70-ற்கும் 100ற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் இரவு பகலாக தமது அன்றாடப் பணிகளுடன் போதை ஒழிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   
                                                                                                                                                                                                                                                                            

No comments

Powered by Blogger.