சாராய உற்பத்திச்சாலையை மூடுங்கள் - கிழக்கு முதலமைச்சரிடம், ரதன தேரர் கோரிக்கை
மட்டக்களப்பு கல்குடாவில் தற்போது சாராய உற்பத்திச்சாலை அமைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே கிழக்கு மாகாண முதலமைச்சர் இனவாதம் பேசுவதை விடுத்து மேற்படி விவகாரங்களுக்கு சட்டத்தினை பயன்படுத்தி முட்டுக்கட்டையிடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என அதுரலியே ரதன தேரர் கோரிக்கை விடுத்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பல புதிய உற்பத்திகள் பலவற்றினையும் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான உற்பத்தி வலுவாக்கத்தின் போது கிருமிநாசினி பயன்பாட்டினை முற்றாக ஒழிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். கிருமி நாசிகளுக்கு மாறாக இயற்கை சக்திகளின் பயன்பாட்டினை அதிகரித்துக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்.
ஒரு விடயம் குறித்து சகலரும் ஒருமித்த சிந்தனைகளுடன் பார்க்கின்ற போது நல்லிணக்கமும் ஏற்படும். அதனால் அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு வடக்கு, கிழக்கு என்ற எல்லை அடிப்படையிலான பேதங்களையும், இன ரீதியிலான வேறுபாடுகளையும் களைந்து செயற்பட வேண்டும்.
அதேபோல் மேற்படி வேலைத்திட்டங்களின் போது அதனுள் மது ஒழிப்புச் செயற்பாடுகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த தீர்மானித்துள்ளோம். தற்போது கல்குடாவில் சாராய உற்பத்தி தொழிற்சாலை ஒன்று நிறுவப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது குறித்து அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும்.
இந்திய பீகார் மாநிலத்தில் செய்யப்பட்டது போன்று முதலைமைச்சர்கள் தலையீடு செய்து மதுப் பொருட்கள் உற்பத்திக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்து அவ்வாறான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையிட வேண்டும்.
இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முதலைமைச்சர்கள் இனவாதம் பேசுகின்றரே தவிர மது ஒழிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் கொள்வதில்லை.
அவர்களும் அது குறித்து அதிக கவனம் செலுத்துகின்ற போதுதான் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாம் அடைய முடியும். எனவே மேற்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முதலமைச்சர்கள் இருவரும் இனவாதப் பேச்சுக்களை விடுத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளின் போது கைகோர்த்துக்கொண்டு செயற்பட்டால் அவர்களுக்கு நாமும் உதவியாக இருப்போம் என்றார். விடிவெள்ளி

VERY GOOD OPINION.SLMC TOTALLY BANCRFTED
ReplyDeleteEastern chief minister must curb this very appalling liquor project. It's his moral responsibility.
ReplyDeleteமானம்கெட்ட முஸ்லிம் MP கள் ஒரு பௌத்த தேர்ர் கேட்குமளவுக்கு தள்ளாகப்ப்பட்டுள்ளனர்.
ReplyDeleteபதவி , பணம் இதுதான் நமது முஸ்லிம் MP களின் முழு நேர சிந்தனை.
இவர்களை தெரிவுசெய்த மக்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும்.