Header Ads



வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு: ஹக்கீம்

வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகொன்றை வழங்க வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் அரசியல் உரிமைகளுக்குத் தீர்வாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்படுகின்றது.

ஆனால் இப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் போரின் போது பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பது மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் பாதிப்புகளை சந்தித்துள்ளார்கள்.

எனவே, வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவதாக இருந்தால், அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

3 comments:

  1. தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வாக முஸலீம்களுக்கு பிரச்சினையை உருவாக்க முடியாது தனியலகு அமைச்சர் ரவுப் கக்கீமுக்கு வேண்டுமானால் கொடுக்கட்டும் ஆனால் தீருவு என்று ஒன்று வருகின்றபோது அது நிச்சயம் முஸலீம்களுக்கான தீர்வாகவும் அமைதல் வேண்டும்.இது வரையும் யாழ்பான முஸ்லீம்களை வடமாகாண சபையும் அரச அதிகாரிகளும் நடாத்தும் விதம் அனைவரும் அறிந்த விடயம் முஸ்லீம் கங்கிரஸ் தலைவர் ரவுப் கக்கீம் இந்த விடயம் சம்பநதமாக கருத்திணை ஆமோதிக்க முடியாது.தனியலகு என்பது அரசியல் கண்துடைப்பு.

    ReplyDelete
  2. if he born and live in eastern prov. he would never say this.

    ReplyDelete
  3. வேதாளம் முருங்கை மரம் ஏறுது... ஒன்னு மரத்துக்கு சப்போர்ட் குடுங்க இல்லயா வேதாளத்த கட்டி வைங்க...

    ReplyDelete

Powered by Blogger.