Header Ads



பாடசாலை சீருடையில் போராட்டத்தில் ஈடுபட முடியாது - கல்வியமைச்சு அதிரடித் தடை

பாடசாலை நேரத்தில், பாடசாலை சீருடையில் மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குக் கல்வியமைச்சினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.    

இதற்கான, சுற்றறிக்கை, கல்வியமைச்சின் பாடசாலைப் பிரிவினால், நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நேற்று (27) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று, அப்பிரிவு அறிவித்துள்ளது.  

இதேவேளை, பாடசாலை நேரத்தில், பாடசாலை வளாகத்துக்குள் வெளியார் நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.   

விசேடமாக, பாடசாலை நேரத்தில், மாணவர்களை பாடசாலைக்கு வெளியில், எவ்விதமான போராட்டங்களிலும் ஈடுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அத்துடன் வெளிநபர்கள் பாடசாலைகளுக்கு நுழையவோ, வகுப்பறைகளுக்குச் சென்று உரையாற்றுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.  

வெளிநபர்கள், பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்தால், அவை தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு உடன் அறிவிக்கவேண்டும்.

   பாடசாலை மாணவர்களை பாதுகாத்தல் மற்றும் பாடசாலையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2 comments:

  1. பாடசாலை சம்மந்தமான போராட்டத்தை பாடசாலை சீருடையுடன் நின்று போராடினால்தான் பாடசாலை மிணவர்கள் என்று தெரியும் இல்லை என்றால் வேறு வெளியார்கள் பாடசாலை விடயத்தில் இடயூறு விளைவித்ததாக கூறி பொலிசாரும் இராணுவமும் காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கி வாழக்கும் பதிவு செய்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.