சகல பதவிகளிலிருந்தும், இராஜினாமா செய்வேன் - மரிக்கார்
கொலன்னாவ மீதொட்டமுல்லை, குப்பைமலை விவகாரத்துக்கு உரியவகையில் தீர்வினை பெற்றுகொடுக்காவிடின், அரசாங்கத்தில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்வேன் என்று, ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மீதொட்டுமுல்லையில், நேற்று (22) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுமும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விசேடமாக இந்த குப்பை மலை தொடர்பில், பிரதேசவாசிகளினால் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அதனை செயற்படுத்துவதற்கும் இங்கிருக்கின்ற அதிகாரிகள் சிலர் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment