இலங்கை முஸ்லிம்கள் பற்றி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதுவுமேயில்லை..!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று -22- இடம்பெற்ற விவாதத்தில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அறிக்கையை முன்வைத்தார். அதிலும் எதுவுமேயில்லை.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்காவுக்கு பதில் உரை ஆற்றும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. சிறிலங்கா தரப்பில் உதில் அறிக்கையை சமர்ப்பிக்க 5 நிமிட அவகாசம் அளிக்கப்பட்டது. அதிலும் இலங்கை முஸ்லிம்கள் பற்றி எதுவுமேயில்லை.
அதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, செக் குடியரசு, ஜேர்மனி, மொன்ரனிக்ரோ, டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, எஸ்தோனியா, சூடான், மசிடோனியா, நோர்வே, அயர்லாந்து, ஸ்பெய்ன், பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, கானா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உரையாற்றின.
இதையடுத்து தற்போது, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கஜேந்திர குமார் பொன்னம்பலம், நிமல்கா பெர்னான்டோ, ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து அன்புமணி இராமதாஸ், பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.
இதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பதில் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, சிறிலங்கா நேரப்படி, இரவு 9.13 மணியளவில் இந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுவே பிரதான நிகழ்வு. இலங்கை முஸ்லிம்கள் பற்றி இவற்றில் எங்குமே, எதுவுமே பேசப்படவில்லை

Post a Comment