Header Ads



ட்ரம்ப் + மைத்திரி - ஒபாமா + மஹிந்த

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செயற்பாடு போன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணுகுமுறையும் அமைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் ஒரு முறை அரசியலுக்கு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதனை தொடர்ந்தே இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாட்டிற்கு எதிராக மீண்டும் அரசியலில் ஈடுபட ஒபாமா தீர்மானித்துள்ளார்.

ட்ரம்ப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு அமெரிக்க மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒபாமாவின் கருத்தாகும்.

ட்ரம்ப்பை இராஜினாமா செய்ய வைத்தல் அல்லது குற்றச்சாட்டின் ஊடாக பதிவியில் இருந்து விலக வைப்பதே முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தற்போது எதிர்க்கட்சி சக்திகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த சக்திகளினால் அவருக்கு தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையிலும் அவ்வாறானதொரு நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதையின் மைத்திரியின் ஆட்சிக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச சக்திகளை ஒன்று சேர்த்து வருவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.