Header Ads



ஜேர்மனியில் அதிகளவில், உதவுவது இஸ்லாமியர்கள்தான் - ஆய்வில் தகவல்

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு அதிகளவில் உதவி செய்வது இஸ்லாமியர்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த Bertelsmann Stiftung என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட பிற வெளிநாடுகளில் இருந்து புகலிடம் கோரி ஜேர்மனிக்கு வரும் அதிகளுக்கு எந்த மதித்தினர் அதிகளவில் உதவி செய்கிறனர் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு சுமார் 44 சதவிகித இஸ்லாமியர்கள் தானாக முன் வந்து உதவி செய்கின்றனர்.

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அகதிகளுக்கு உதவி செய்வதில் கிறித்துவர்கள் இரண்டாவது இடத்தில்(21 சதவிகிதம்) உள்ளனர்.

பின்னர், மதங்களை குறிப்பிடாத அல்லது மதங்களில் சேராத சுமார் 17 சதவிகிதத்தினர் அகதிகளுக்கு உதவி செய்வதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஜேர்மனி நாடு முழுவதும் ஐந்து பேரில் ஒருவர் அகதிகளுக்கு தானாக முன் வந்து உதவி செய்வதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Not only in German even in UK Muslims contributes towards charity more than any other faiths.

    ReplyDelete

Powered by Blogger.