Header Ads



மஹிந்த தலைமையில் உருவாகும் அரசாங்கம், கடும் தண்டனை விதிக்கும் சீற்றம்

அநீதியான அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அநீதியாக செயற்பட்டு வரும் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் அதிகாரிகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாக்கப்பட உள்ள அரசாங்கம் கடுமையான தண்டனை விதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ள விமல் வீரவன்சவை விடுதலை செய்யும் வரையில் போராட்டங்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.