Header Ads



கண்டி வைத்தியசாலை, நோயாளர்களுக்கு பாகற்காய் மருந்து


-JM-Hafeez-

புற்றுநோய்க் கலங்ளை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்துக்களுக்கு உண்டென பேராதனை பல்லைக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாக பேராசிரியர் ஜயந்த ராஜபக்ச தெரிவித்தார். பேரானையில்வைத்து இது பற்றி அவர் தெரிவித்தார்.

புற்று நோய்க்கலங்ளை முற்றாகசெயல் இழக்கச்செய்யும் இராசாயன இயல்பு பாகற்காய் வித்துக்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டதாக பேராதனைப் பல்லைக்கழக மிருகவைத்திய பிரிவு பேராசிரியர் ஜயந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்-

ஒரு வருட காலமாக பாகற்பாய் வித்துக்களை வைத்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் படி பாகல் வித்திலுள்ள அல்பா ஸ்டியரிக்பெடி அமிலம் (steric fatty acid) என்ற இரசாயனம் மூலம் புற்று நோயைக் குனப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

கிருமிகொள்ளிகள் பாவிக்கப்படாத சுத்தமான பாகற்காய் வித்துக்களை பயன் படுத்தி மேற்படி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. பலவேறு விலங்கினங்ளைப் பயன் படுத்தி இந்த பரிகாரத்தை மேற்கொண்டதாகவும் அல்பா இஸ்டயரிக்பெடி அமிலத்தினால்  புற்றுநோயைக் குணப்ப் படுத்தலாதம் என்பது உறுதியானது. பொது மக்கள் மத்தியில் பாகற்காய் நீரிழிவு நோயக்கு சிறந்த ஒரு நிவாரணியாகப் பெயர் பெற்றிருந்த போதும்பொதுவாக இதுரை பாகற்காய் வித்துக்ளை உணவாக் கொண்டதில்லை. ஆனால் பாகற்காய் முழுமையான மருத்துவக் குணம் கொண்டது. குருதியிலுள்ள சீனி மட்டத்தை முற்றாக்க் கட்டுப்படுத்தக்கூடியதாகும்.

 மிகவும் தூய பாகற்காய் வித்துக்ளை இந்த ஆய்விற்காக எடுத்துக்கொடோம். அப்படியான வித்துக்கள் ஒரு கிலோ 6000 ரூபா முதல் 8000 ரூபா வரை விலை காணப்பட்டது. ஒரு பாகற்காய் கேப்சூலூக்கு 8 வித்துக்கள் வரை தேவைப்படுகிறது.

கண்டி வைத்திய சாலையிலுள்ள நோயாளர்களுக்கு இந்த வைத்திய முறையை அறிமுகம் செய்துள்ளோம். இது வெற்றிகரமாக முன் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில்பேராதனை பல்லைக்கழக வைத்திய பீடத்திற்கு இதனை ஒப்டைக்க உள்ளதாகவும் கூறினார்,

கண்டி வைத்திய சாலையில் உள்ள புற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுனர் மொகமட் ஹில்மி அவர்களது விசேட கண்காணிப்பில் கண்டி வைத்திய சாலை நோயாளர்களுக்கு வாரத்திற்கு இரு முறை பாகற்காய் வித்திலான மருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.