Header Ads



முஸ்லிம் பொலிஸ், உத்தியோகத்தரின் நேர்மை -

மட்டக்களப்பு பிரதான வீதியின் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் பணப்பை நேற்று -24- கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஏ.ரஹீம் முன்னிலையில் உரிய பெண்ணிடம்  ஒப்படைக்கப்பட்டது.

38 ஆயிரம் ரூபா பணம், வங்கி பண வரவு அட்டை  என்பவை பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் மட்டக்களப்பு பிரதான வீதியில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பணப்பை யாருடையது என்பதை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு எந்த தகவலும் பணப் பையில் கிடைக்காத காரணத்தால் பணப்பையில் இருந்த சம்பத் வங்கி ஏ.ரீ.எம். பண வரவு அட்டையை வங்கியில் கொடுத்து பணப்பை உரிமையாளரான மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கனேஷன் சுகந்தினி என்ற பெண்ணின் தகவல் பெறப்பட்டது.

இதனையடுத்து பணப்பை உரிமையாளரான கனேஷன் சுகந்தினியிடம் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டது.

12 comments:

  1. மற்றவனுக்கு இனவாதி என பட்டம் சூட்டும் எம்மவர் சிலரின் இனவாத நிலை புலப்படுகிறது தலைப்பில்!

    ReplyDelete
  2. CHARIYAAHA CHONNEER NANBA

    ReplyDelete
  3. Any how I m proud of him caz he's frm my village too..."Hapugastalawa"
    Good work bro..!!

    ReplyDelete
  4. Any how I m proud of him caz he's frm my village too..."Hapugastalawa"
    Good work bro..!!

    ReplyDelete
  5. mashaallah allahuakbar

    ReplyDelete
  6. சரியாக சொன்னீர்கள். நாங்கள் முஸ்லிம்கள். அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள். Jaffnamuslim இனியாவது இனரீதியாக செய்தி வெளியிடுவதை தவிர்க்கவும்

    ReplyDelete
  7. ஏன் பொலிஸ் உத்யியோகத்தரின் நேர்மை.. இது பொறுத்தமான தலைப்பு

    ReplyDelete
  8. ஏன் பொலிஸ் உத்யியோகத்தரின் நேர்மை.. இது பொறுத்தமான தலைப்பு

    ReplyDelete
  9. தலைப்பு தவறானது

    ReplyDelete
  10. என்ன கொடுமைடா இது ! ஒரு போலீஸ் தனது கடமையை சரியாக செய்துள்ளார் . இதிலென்ன நேர்மை வேண்டியிருக்கிறது ? அப்படியென்றால் போலீஸ்காரர்கள் எல்லாம் திருடர்களா ? என்ன எழவுல வச்ச தலைப்புடா இது ?

    ReplyDelete
  11. இலஞ்சம் கேட்டு வாங்கும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தரை நீர் கண்டதில்லையா..

    ReplyDelete
  12. @Rahmatullah சரியாக சொன்னீர்கள் . இந்த செய்தி உண்மையில் இலங்கையர்களாகிய நம்மை வெட்கப்பட வைக்கவேண்டும். ஏனெனில் நேர்மையாக தன்கடமையை செய்பவர்கள் அரிது என்பதால் தான் இவ்வாறான நேர்மையான அதிகாரிகளை காண்பது ஒரு அதியசம் போன்று செய்தி வெளியிடப்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.