Header Ads



காதலித்து திருமணம் செய்தாலும், சேதம் ஏற்படும் - இது அமைச்சரின் விளக்கம்


இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்தாலும் திருப்தியான சேதம் ஏற்படும் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவி்த்துள்ளார்.

பிபில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டாலும் திருப்தியான சேதம் பாதிப்பு ஏற்படும்.

பிள்ளை ஒன்று பிறக்கும் போது எவ்வளவு கஷ்டம். தாயாருக்கு எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படும். எனினும் அது திருப்தியானது.

இதனால், நாங்கள் திருப்தியான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போதைய அரசாங்கமானது 100 வீதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமோ, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமோ அல்ல. கட்சிகளும் 50க்கு 50 ஆட்சி நடத்துகின்றன என்றும் நான் கூற மாட்டேன்.

100 வீதமான ஐக்கிய தேசியக் கட்சியினர் எமக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றும் அந்த கட்சியினருக்கு நாங்கள் ஆதரவாக செயற்படுகிறோம் என்றும் கூறுவதில்லை.

ஆனால், ஒன்றாக படகை ஒட்டுகிறோம். அடியில் தீயை எடுத்துச் செல்கின்றனர். இதுதான் தற்போதைய அரசாங்கம். ஒரே தட்டில் சாப்பிட்டாலும் வயிறு வேறு வேறு. உள்ளே பனிப் போர் நடக்கின்றது.

நாங்கள் எங்களது கட்சியை ஒருங்கிணைக்கின்றோம். அவர்கள் அவர்களது கட்சியை ஒருங்கிணைக்கின்றனர். வேறு சிலர் சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை ஒருங்கிணைத்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.