Header Ads



எனது வீட்டு கதவினை திறந்துவந்து, என்னுடன் கலந்துரையாட முடியும்

எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டு கதவினை திறந்து வந்து என்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

நான் யாழ்ப்பாணம் வருகின்ற போது எனக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக செய்திகளில் இருந்து அறிந்தேன். அது மட்டும் அன்றி, கிழக்கு, பொலநறுவையில் தனது வீட்டுக்கு முன்பாக கூட நூற்றுக்கணக்கில் வேலையில்லாத பட்டதாரிகள் வேலைகளை வழங்குமாறு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தினை நடத்துவத்தினை விடுத்து என்னிடம் வந்து கதைத்திருந்தால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்திருப்பேன். அப்பொழுது அவர்கள் மீது பெரிய அன்பு மற்றும் கரிசனை இருந்திருக்கும்.

அதனால், போராட்டத்தினை நடத்தியதால் அவர்கள் எனக்கு விரோதிகள் இல்லை. அவர்கள் மீது கோப தாபங்களும் இல்லை. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடாமல் என்னை வந்து சந்தித்தால் மிகவும் சந்தோஷமடைவேன். நீங்கள் சொல்லலாம் என்னை சந்திப்பது மிகவும் கடினம் என்று, ஆனால் என்னை சந்திப்பதற்கு எந்த கஷ்டமும் இல்லை.

குறிப்பாக எனது கொழும்பு அலுவலகத்தில் நாளுக்கு நூறு, இருநூறுக்கு மேற்பட்டவர்கள் வருகின்றார்கள் அப்போது எங்களுடைய கதவு எப்போதும் திறந்துதான் இருக்கும்.

அங்கு வர முடியாத பட்சத்தில் இந்த “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்" என்ற அமைப்பின் ஊடாக தெரிவியுங்கள் கட்டாயம். அதற்கு தீர்வு வழங்க முன்வருகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. கொழும்பில் ஒருவர் ஏன் கைது செய்யப்பட்டார்

    ReplyDelete

Powered by Blogger.