மஹிந்த மைத்திரி பேச்சு, விமலின் மகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டல்
விமலை விடவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய மகளே, அதனை கருத்திற் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
விமலை பார்வையிட தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்த மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.
மேலும், விமலின் போராட்டம் வெற்றியையே பெற்றுள்ளது. அவர் அரசின் முறையற்ற செயல்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினார். அந்த வகையில் அது வெற்றியடைந்துள்ளது.
இப்போது பிரச்சினை விமலை விடவும் அவருடைய மகளுக்கே. தந்தை தொடர்பில் அவர் மனவேதனை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அவர்.
அதனை கருத்திற் கொண்டு பிணை வழங்குவது என்பது விஷேடமான காரணமாகும். இது தொடர்பில் ஆலோசனை செய்யப்படும் என நான் நம்புகின்றேன்.
ஜனாதிபதியுடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். எமது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் மகிந்த தெரிவித்தார்.

அப்படியே அரசியல் கைதிகளாக பல வருடமாக சிறையில் வாடும் கைதிகளின் பிள்ளைகள் பற்றியும் அவருடன் பேசுங்கள்,
ReplyDeleteYes, indeed. Vimal must be punished if he's proved with conviction. Many political prisoners idling in prison without any justice.
Deleteமுன்னால் ஜனாதிபதி பெரிசா கிலிச்சாரே விமலின் வாயை யாராலும் கட்டுப்படுத்த முடியாதென்று இப்ப என்ன வக்காலத்து
ReplyDeleteMy3 is not a judge in the court. Where is the independence judicial in the Yahapalanaya?
ReplyDeleteஏண்டா மஹிந்த இந்த விமல் வீரவன்ச மட்டுமா பிள்ளை உண்டு ஏனைய சிறைக்கைதிகளுக்கு பிள்ளைகள் இல்லை அந்த பிள்ளைகள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்களோ? பத்திரிகையாளர் எனலியகொட,ரகர் விளையாட்டு வீரர் தாஜுதீன் மேலும் என்றாலும் உன்தம்பியாலும் கடத்தப்பட்டு கொள்ளப்பட்டவர்களுக்கெல்லாம் பிள்ளைகள் இல்லையோ? உனக்கெல்லாம் மரனதண்டனை வழங்கப்படாமல் சுகந்திரமாக விடப்பட்டுள்ளது இலங்கையர்களின் தப்பு!
ReplyDelete