Header Ads



பாணந்துறை நீதிமன்றத்தினால் 5 பேருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்தமை மற்றும் மற்றுமொரு நபருக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இந்த ஐந்து பேருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட ஐந்து பேருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க இன்றைய தினம் -29- மரண தண்டனை விதித்துள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஐந்து பேருக்கு மேலதிகமாக மற்றுமொரு நபருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆறாவது சந்தேக நபர் குற்றமற்றவர் என தெரிவித்து அந்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.