லண்டன் மீது பயங்கரவாத தாக்குதல் - 10 முக்கிய தகவல்கள்
-BBC-
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல் குறித்த 10 தகவல்கள்
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல் குறித்த 10 தகவல்கள்
போலிஸாரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல்தாரி, ஒரு போலிஸ் அதிகாரி, பொது மக்களில் இரண்டு பேர் என நான்கு பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பலியான போலிஸ் அதிகாரி, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக முதலில் அடையாளம் காணப்பட்ட பெண்மனியின் பெயர் ஐஷா ஃபிராடே, 43 வயதாகும் அவர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அவர், தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற வளாகத்தை அடைவதற்கு முன்னர் தாக்குதல்தாரி வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் பொதுமக்கள் மீது தான் ஓட்டி வந்த வாகனத்தை கொண்டு மோதினார்.
தாக்குதல்தாரியின் பெயர் வெளியிடப்படவில்லை; அவர் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாக்குதல்தாரி சர்வதேச பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பொறுப்பு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இது ஒரு "இழிந்த மற்றும் மோசமான செயல்" என விவரித்துள்ளார்.
கடந்த ஆண்டில் வாகனங்களை ஏற்றி மக்களை கொன்ற கொடும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், பிரிட்டனுக்கு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளன.

Well said, brother!
ReplyDelete