Header Ads



வக்பு சபையின் கீழ், மத்­ர­ஸாக்­களை பதிய நட­வ­டிக்கை - அமைச்சர் ஹலீம்

-ARA.Fareel-

நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்கள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரைவில் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

அரபு மத்­ர­ஸாக்­களின் வக்பு செய்­யப்­பட்­டுள்ள சொத்­துகள் தொடர்பில் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் போது அவற்றைச் சட்­ட­ரீ­தி­யாகத் தீர்ப்­ப­தற்கு இவ்­வா­றான பதி­வுகள் அவ­சியம் தேவைப்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறினார். அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கு வக்பு செய்­யப்­பட்­டுள்ள சொத்­துகள் தொடர்பில் முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வது தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், அரபு மத்­ர­ஸாக்­க­ளினால் பரி­பா­லிக்­கப்­படும் சொத்­துகள் தொடர்­பாக பல முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த முறைப்­பா­டு­களை விசா­ரித்து சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு வக்பு சபை பதி­வுகள் இன்­மை­யினால் நீண்ட காலம் செல­வி­ட­வேண்­டி­யுள்­ளது.

வக்பு சபையின் தலை­வரும் இது தொடர்­பாக கோரிக்கை ஒன்­றினை முன்­வைத்­துள்ளார்.

அவ்­வாறு பதிவு செய்­யப்­பட்டால் சொத்­துக்­களைக் கண்­கா­ணிக்கும் வாய்ப்பு சட்­ட­ரீ­தி­யாக சபைக்குக் கிடைக்கும். எனவே அரபு மத்­ர­ஸாக்கள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்­வது தொடர்­பாக அதன் தலை­வ­ருடன் கலந்­து­ரை­யாடி விரைவில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளேன்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பாளர் நூருல் அமீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது தற்­போது நாட்டில் 280 அரபு மத்­ர­ஸாக்கள் இயங்­கி­வ­ரு­கின்­றன. இந்த மத்­ர­ஸாக்கள் அனைத்தும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன.

அவற்­றுக்குப் பதிவு இலக்­கங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் இந்த மத்­ர­ஸாக்கள் வக்பு சபையின் கீழ் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு பதிவு செய்­வ­தானால் வக்பு சட்­டத்தில் இவ்­வி­தி­முறை உள்­வாங்­கப்­பட வேண்டும்.

என்றார். வக்பு சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ். எம். எம். யாசீனைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது சபையின் கீழ் அரபு மத்ரஸாக்கள் பதிவு செய்யப்பட்டால் அவற்றின் சொத்துக்களை சபை கண்காணித்து, முறையீனங்கள், ஊழல்கள் ஏற்படாது தவிர்க்க முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.