Header Ads



சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் - உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்


களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்சின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் "சமயங்" எனப்படும் அனுர உதயஷாந்தவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இவர் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவராக செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. 

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

சந்தேகநபர்களை களுத்துறை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

(பின்னிணைப்பு) 

இதேவேளை, இந்த சம்பவத்தில் எஸ்.சன்னிகம் மற்றும் எஸ்.ஆர்.விஜேரத்ன என்ற இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்களே பலியாகியுள்ளனர். 

அத்துடன், இதன்போது உயிரிழந்த சந்தேகநபர்கள் தமித் பத்திரன, திலக் மலிக்கே, பிரசன்ன சம்பத், கெலும் பிரியங்கர மற்றும் பிரசன்ன குமார எனத் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.