யாழ்ப்பாணம் முஸ்லிம் பகுதியில், 'பாபுல்' கடையை அகற்ற உதவுமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள இனிப்புக்கடையில் பாபூல்போதை தரும் பாக்குகள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஐந்து சந்திப்பகுதியில் இனிப்புக்கடை என்ற பெயரில் முஸ்லீம் வியாபாரி ஒருவர் இஸ்லாத்திற்கு முரணான போதை ஏற்றக் கூடிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.
இந்த பொருட்களை முஸ்லீம் இளைஞர்கள்இபாடசாலை மாணவர்கள் இஏனைய சமூக இளைஞர்கள் அதிகளவாக கொள்வனவு செய்து தங்கள் உடமைகளில் வைத்துள்ளனர்.
இந்த போதை தரும் பாக்கு ஒரு பொதியை ரூபா 50 க்கு விற்கும் இந்நபர் அப்பகுதியில் தற்போது ஏற்படும் குழு மோதலிற்கு உடந்தையாக உள்ளார்.
இந்நபர் தொடர்பாக அப்பகுதியில் உள்ள உலமா சபை கிளையோ பள்ளிவாசல்களோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
குறித்த போதை பொருட்களை சங்கேத மொழிகளில் கடைக்கு வரும் இளைஞர்கள் கேட்டு பெற்று கொள்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறித்த கடையை அப்பகுதியில் இருந்து அகற்ற உதவுமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுள்ளனர்.

நல்ல முடிவு . ஊரே ஒன்று திரண்டு இந்த மாதிரியான சாக்கடைகளை அகற்ற வேண்டும். மனித குலத்துக்கே கேடுதரும் இந்த மாதிரியான விடயங்களுக்கு குரல் கொடுக்க மதவேற்றுமை பாராமல் அனுவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ReplyDeleteஇதே போல் மற்ற ஊர்களிலும் இவ்வாரான போதைப்பொருள் விற்பனையாளர்களை இனம்
கண்டு அவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்தி எதிர்கால சந்ததியினரை அனைவரும் ஒன்று சேர்ந்து பாதுகாப்பது நமது கடமையாகும்.