Header Ads



சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு, வைத்தியர்கள் உதவி - ராஜித

சிறைச்சாலை வைத்தியர்களை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த உத்தரவை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வாவுக்கு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு குறித்த வைத்தியர்கள் உதவி செய்வது குறித்து தெரியவந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.