முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளுக்கான, புத்தெழுச்சி செயலமர்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தெழுச்சி செயலமர்வு சனிக்கிழமை (25) கண்டி ஓக் ரே ஹோட்டலில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடளாவிய ரீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என 160க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மக்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் வகையில், அடுத்த இரு மாதங்களில் நடாத்தப்படவுள்ள மக்கள் சந்திப்புகள், பொதுக்கூட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதன்பின்னர் இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துவரும் "வீட்டுக்குவீடு மரம்" நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.


இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, மக்களை ஏமாற்றும் பிரநிதிகள். இன்னும் எப்படி ஏமாற்றலாம் என்று திட்டமிடுகிறார்கள். எதிர்கால நடவடிக்கைள் பற்றி கதைக்கப்போகிறார்களாம். கடந்த 15 வருடங்களாக என்ன செய்தார்கள் என்று கூறட்டும். அதன் பிறகு எதிர்காலத்தை பற்றி சிந்திக்கட்டும். ஒரு எதிர்காலமுமில்லை, இந்த ஹக்கீமையும், அவரது அடிவருடிகளும் அரசியலில் தோக்கடிக்கும் வரை.
ReplyDeleteஇந்த ஹக்கீமின் ( உருப்படியா எந்த அரசியல் சித்தாந்தமோ, அரசியல் சாணாக்கியமோ, உறுதிப்பாடோ, உண்மைத்தன்மையோ, அறிவோ, ஆற்றலோ, சூடு, ரோசம்.... கிடையாதவர்) கடந்த கால சாதனைகள் இதோ..
** சந்திரிக்கா அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற பட்டமை.
** ஒசுலோவில் ஒன்றும் புரியாமல் விழி பிதிங்கியதும், அன்டன் உமக்கு ஒன்றும் புரியாது வாயை பொத்தி கொண்டிரும் என்று கூறியதும் இவர் பல்லிளித்ததும். அதன் பிறகு எம் ஐ மொஹிடீன் அவர்களை உள்வாங்கியதும்.
** றிசாத், அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹிஸ்புல்லா.... போன்றவர்கள் அரசியலில் தலைவர்களாக மறியாமையும்.
** ரணிலிடம் இருந்து ராஜபக்சவிடம் ஓடியது.
** ஹலால் பிரச்சினை, பொதுபல சேனா பிரச்சினை, அழுத்தகம பிரச்சினை, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, முஸ்லிம்கள் இரண்டாத்தர பிரைஜைகளாக பயமுறுத்தி நடத்தப்பட்டமை.
** நான் வாய் திறந்தாள் கோத்தபாய தன்னை சிறையில் அடைத்திருவான், கொண்டு விடுவான் என்று கோளைத் தனமாகவும், பொன்னத்தனமாகவும் கூறியது. ( அசாத் சாலி தடுப்புக்காவலில் இருந்த போது, தொழிலதிபர் சியாம் கொல்லப்பட்ட போது.)
** இத்தனைக்கும் இவர் நீதி அமைச்சர். ஜனாதிபதி தேர்தல் தபால் வாக்கு போடும் வரைக்கும்.
** பொய் வாக்குறுதிகள் கொடுத்து இன்னும் தேசிய பாட்டியல் எம்பி பதவியை தனது நண்பனுக்கு கொடுத்தமை.
** ஹசன் அலி அவர்களை அப்படடமாக ஏமாற்றியமை.
இப்படி இன்னும் பல.........
மக்களே, புத்திஜீவிகளே, இளைஞர்களே, சமூக ஆர்வலர்களே, ஊடகவியலாளர்களே உங்களது பங்களிப்பு அவசரமாகவும் அவசியமாகவும் இந்த முஸ்லீம் சமூகத்துக்கு தேவைப்படுகிறது, இந்த விடயத்தை கவனத்தில் எடுப்பீர்களா???
" அடுத்த தேர்தல் ஹக்கீமின் கட்சிக்கும், அவரது அடிவருடிகளுக்கும் எதிரான தேர்தலாகவே இருக்கும்."
Makkele viththelunkal ivanlam soththu matukal
ReplyDeleteஹஸன் அலி இல்லாத கா௩்கிரஸா? இஸ்லாத்தை ௴றும் தலைமைத்துவமா? இஸ்லாம் இனிக்கும் ஆரிபுக்கு இந்தப் பழம் இனி புளிக்கும்
ReplyDeleteதலைமைத்துவத்தை தக்க வைத்துக்கொள்வதட்கு புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன .
ReplyDelete