Header Ads



வீண் விரயம் செய்து, அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள்

''அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால். அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6 : 141)

இந்த உலகத்தில் எல்லோரும் நேசித்து, அல்லாஹ் நேசிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்பதை ஒரு கணம் யோசிக்கவேண்டும்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதைவிட அல்லாஹ் உங்களை நேசிப்பது மிகச் சிறந்து! அல்லாஹ்வின் நேசமும், அருளும் ஒரு அடியானுக்கு வேண்டும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்;

''நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள்! விரும்புவதை அணியுங்கள்! ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்ககூடாது. (நூல்: புகாரி)

 இன்ஷா அல்லாஹ் ரமளானுக்கு பிறகு நிறைய நிக்காஹ் நடைபெற உள்ளது. ஒரே நாளில் பல நிக்காஹ் ''எங்கே போவது என்று தெரியாமல் சீட்டு குல்லுக்கி போட்டு போகும் அளவுக்கு ஆகிவிட்ட்டது! ஒரே நாளில் நடைபெறுவதால் உணவு நிச்சயமாக வீணடிக்கப்படும் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

இன்று இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடக்கிறது என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக ஒரு நீண்ட கட்டுரை எழுதவேண்டும்!

வீடு வாசலில் வெகு நேரம் நின்று கெஞ்சும் ஏழைக்குப் பத்து அரிசி போட பயந்து, டக் கென்றுக் கதவை மூடுபவர்கள்- பையனின் கல்யாணத்தில் பட்டு உடை, சுவையான உணவு, பேண்டு வாத்தியக் கோஷ்ட்டி மறுப்பக்கம் விளக்கு அலங்காரம் என்றலெல்லாம் தடபுடலகாச் செலவு செய்கிறார்கள்.

இன்று ஒரு புதிய காலாச்சாரம் என்னவென்றால், திருமணவீட்டில் பந்தலில் மிகப் பெரிய பேனர் ''எல்லோரும் வாழ்த்துகிறார்கள்'' இரண்டு ரகாயத் தொழுது அல்லாஹ்விடம் உதவியும், அருளையும் கேட்க வேண்டும் என்பது இவர்களுக்கு தோன்றாது. அதுமட்டும் அல்ல, டிவியில் விளம்பரம் ''இன்ன நாளில் இன்னாருக்கு திருமணம் என்று!"

சில திருமணத்தில் மதுவும் பரிமாறப்படுகிறது - சில நண்பர்கள் குடித்துவிட்டு விருந்து உண்ண வருகிறார்கள். வீடியோ கலாச்சாரம் . வித விதமாக பெண்களை போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது , மணப்பெண்ணை திறந்து வைத்து போஸ் கொடுக்கச் சொல்லி வித விதமாக எடுக்கிறார்கள். மணமக்கள் அறை வரை வீடியோ காட்சி எடுக்கபடுகிறது. இன்னும் வரும் காலத்தில் அதையும் தாண்டிவிடும் போலிருக்கிறது. அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!!!

பணம் உள்ளவர்கள், அவர்களின் வசதியைக் காண்பிக்கவேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணியாக செலவுச் செய்கிறார்கள் (சிலரைத் தவிர)

இறைவன் அனுமதித்த - பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து காட்டிய ஒரு சுன்னத்தான காரியத்தைச் செய்ய இவ்வளவு ஆடம்பரம் எதற்கு? நமக்கு முன்மாதரியாக வாழ்ந்து காட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஆடம்பரத்தை எல்லாம் விரும்பவில்லையே! வெறுக்கத்தானே செய்தார்கள்? ஒரு சின்ன காரியத்திற்கு வீண் செலவு ஏன்?

இறைவனின் அருட்கொடையை அளவோடு செலவு செய்ய வேண்டாமா? ஆகவே, இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளை நாமும் அனுபவித்து- மற்றவர்களுக்கும் கொடுத்து அளவோடு செலவு செய்யும் தன்மையை ஆற்றலை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

திருமணம் புரிய இருக்கும் இளைஞ்சர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! அனாச்சாரங்களை தயவு செய்து தவிர்க்கவும்! சுன்னத்தான முறையில் உங்கள் நிக்காஹ் நடைபெற முயற்சி செய்யுங்கள்! அதற்குமுன் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

- சத்திய பாதை இஸ்லாம்

No comments

Powered by Blogger.