Header Ads



மாளிகாவத்தை மையவாடிக் காணி, மீண்டும் அபகரிப்பு


ARA.Fareel
மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி காணியை ஆக்­கி­ர­மித்து சட்ட விரோதக் கட்­ட­ட­மொன்­றினை நிர்­மா­ணித்து  வரும் தனியார் நிறு­வனம் அவ்­வி­டத்தில் அமைந்­துள்ள இலங்கை மின்­சார சபையின் அதி­சக்தி வாய்ந்த மின்சாரக் கட்டமைப்பை மைய­வாடி காணிக்குள் இட­மாற்­று­வ­தற்கு மேற்­கொண்­டுள்ள ஏற்­பா­டு­க­ளுக்கு மாளி­கா­வத்தை பள்­ளி­வாசல் ஜமா அத்­தாரும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கமும் கடும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. 
மைய­வாடி காணியை ஆக்­கி­ர­மித்து சட்­ட­வி­ரோத கட்­டடம் அர­சியல் பின்­பு­லத்­துடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­துடன் மின் கட்­ட­மைப்­பையும் மைய­வாடி காணிக்குள் நகர்த்த முயற்­சிக்­கின்­ற­மையை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யா­தென இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

இது சம்­பந்­த­மாக தமது அமைப்பு முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்­துள்­ள­தா­கவும் கூறினார்.

மாளி­கா­வத்தை மைய­வாடி காணியை நிர்­வா­கித்து வரும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் இது தொடர்­பாக மாளி­கா­வத்தை பொலிஸில் முறைப்­பா­டொன்­றையும் பதிவு செய்­துள்­ளது. 

குறிப்­பிட்ட மின்­கட்­ட­மைப்பு இட­மாற்றம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார். 

1 comment:

  1. இந்தக்கதயும் இறப்பர்போல இளுபடுகிறது,

    சட்ரீதியாக இதை தட்டிக்கேட்க முடியாத நிலை???

    ReplyDelete

Powered by Blogger.