Header Ads



இரத்த ஆறு ஓடும் - ஞானசாரா மிரட்டல்

அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அவ்­வாறு நடை­பெற்றால் நாடு 5 மாநி­லங்­க­ளாக பிரிந்­து­விடும் என பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் தெரி­வித்தார்.

அத்­துடன் 4000 பௌத்த குரு­மார்­களை கொழும்பில் ஒன்­று­கூட்டி அர­சியல் யாப்பில் திருத்­தங்­களைத் தோற்­க­டிப்போம். எம்மை மீறி திருத்­தங்கள் மேற்­கொண்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் தெரி­வித்தார். 

பொது­பல சேனாவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.  அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டில் காலா­கா­ல­மாக இருந்­து­வரும் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற­வேண்டும் என்றால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அத­னூ­டா­கவே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் என தெரி­வித்து இன்று அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இந்த திருத்­தத்தில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு கூடு­த­லான அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தற்கும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன் அர­சியல் யாப்பில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்டு நாடு 5 மாநி­லங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்டால் இலங்­கையில் நல்­லி­ணக்கம் இல்­லாமல்   போகும். இன, மத அடிப்­ப­டையில் நாடு­பி­ரிந்து விடும். இத­னையே இந்­தியா மற்றும் மேற்­கத்­திய நாடுகள் எதிர்­பார்க்­கின்­றன. எனவே அனைத்து மக்­களும் வேறு­பா­டு­களை மறந்து அர­சியல் யாப்பு திருத்­தத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்க வேண்டும். நாட்­டுப்­பற்­றுள்ள முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் எம்­முடன் இணைந்து போராட முன்­வ­ர­வேண்டும்.

மேலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்­காக குரல் கொடுப்­ப­தாக தெரி­வித்­து­வரும் ஜாதிக ஹெல உறு­மய அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக தங்கள் நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக மக்­க­ளுக்கு தெரி­விக்­க­வேண்டும். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்ள இட­ம­ளிக்க கூடாது. அவ்­வாறு திருத்­தங்கள் ஏற்­பட்டால் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­விடும் என நாட்டில் இருக்கும் சிரேஷ்ட சட்ட அறி­ஞர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். 

எனவே, அரசியலமைப்பில் ஜனாதிப தியின் நிறைவேற்று அதிகாரம் இல்லா மலாக்ககப்படக்கூடாது. நிறை வேற்று அதிகாரம் இருந்தால் மாத்திரமே ஆக் கிரமிப்புகளுக்கு எதிராக ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியும். நிறை வேற்று அதிகாரத்தை இல்லாமலாக்குவதற்கல்ல, அதனை அசைப்பதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம். அதற்காக தேசப்பற்றுள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்  என்றார்.  

10 comments:

  1. இந்த நாத்தம் புடிச்சவெண்ட poto போடாமல் விஷயம் மட்டும் சொல்லுங்கோ Jaffnanews !

    ReplyDelete
    Replies
    1. Kambangkootukulla scent factory vaithirukaan.

      Delete
  2. எதற்கு எடுத்தாலும் இரத்த ஆறு ஓடுமென செல்கிறான்.சிலவேளை இரத்த காட்டேரியோ.

    ReplyDelete
  3. நாட்டுப்பற்றா? இவர் அதைத்தான்தான் நாசம்பண்ணி சாதிக்க பதறுகிரார்.

    ReplyDelete
  4. You BBS started RACISM and HATE speech against HINDUS, CHRISTIANS and MUSLIM.. and continue to threaten them.. SO it looks funny that you ask them to join hand to establish what you wanted.

    EVEN if what you wanted is CORRECT... We will ask for it but not with you.

    GOOD never mixes with BADS

    ReplyDelete
  5. இதனை எப்போதோ செய்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  6. ஞானசாரா தற்போதய உலகில் அரசியல் சட்டம் யாப்பு அனைத்தும் பொது ஏழைமக்களுக்கு மட்டும்தான் அதனால் நீ ஏன் பயப்படவேண்டும்! இலங்கையில் உன்போன்ற மஞ்சல் புடவை கட்டியவர்கள் அனைவரும் இந்த சட்டங்கள் யாப்புகள் அனைதிற்கும் மேல் என்று கூறிக்கொண்டு பெரும் பித்தலாடங்களை பன்னிக்கொண்டிருக்கின்றீர்,ஆகவே இதனால் நீ பயப்பிடவேண்டாம் மஞ்சல் புடவையை நீ அனிந்தால் இலங்கையில் உனக்கு எதுவும் செய்யலாம்!

    ReplyDelete
  7. Allah umar (RALI) awarhalukku hidhayath koduththadai pola ivanukkum hidhayaththai koduppanaaha....

    ReplyDelete
  8. இவனுக்கு எதிர்காலத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமாக ஆகயக்கோட்டை கட்டுகின்றான் ஆகையால் அவர்களின் தற்போது நடகமுறையில் உள்ள அதிகார பலம் இந்த யாப்பால் குறைக்கப்பட்டு விடகூடாது என்று கவனத்துடன் இந்த ஞானசார இருக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.