Header Ads



முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அநீதி - அன்வர்

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது நாளாக (21.12.2016) கல்வி அமைச்சின் பாதீட்டை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி சமர்ப்பித்தார் பின் வாத பிரதி வாதங்கள் இடம்பெற்றன

குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் உரையாற்றுகையில்

2017 ம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதோடு சில கல்வி சமபந்தமான மற்றும் தங்களின் அமைச்சின் கீழுள்ள மீள் குடியேற்றம் தொடர்பாகவும் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் கடந்த பல மாகாண சபை அமர்வுகளில் குச்சவெளி பிரதேசத்திற்கான புதிய கல்வி வலையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தடைவை பேசியதாகவும் அதற்கான நியாயமான காரணங்கள் முன் வைக்கப்பட்தாகவும் தங்களால் இன்று வழங்கப்பட்ட பாதீட்டு கோவையில் இருந்தே நியாயப்படுத்த விரும்புவதாகவும்

2013 தொடக்கம் 2016 ம் ஆண்டு புதிய பாடசாலைகள் 39 ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆசிரிய நியமனங்கள் 2014 ம் ஆண்டில் இருந்து 1732 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன அவற்றில் தமிழ் மொழிமூலமாக 1262 ஆசிரியர்களும் 470 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர் தேசிய கல்வியல் கல்லூரி,உதவி ஆசிரியர்கள்,டிப்ளமோ,பட்டதாரி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் என்ற வகை ரீதியான நியமனங்கள் வழங்கப்பட்டன

ஆனால் அண்மையில் வழக்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனம் கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தில் வழங்கப்படவில்லை அதனை வைத்து பார்க்கும்போது கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகத்தான் உணர்கின்றேன் உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் 80 விகிதமான ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டு மாவட்டத்திலிருந்து ஆசிரியர்கள் குறைவதற்கு காரணம் என்ன பற்றி கல்வி அமைச்சர் விளக்கம் தரவேண்டும்

அதற்க்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சில புதிய பாடசாலைகளுக்கு வேண்டுகோள் நியாயத்துடன் முன் வைத்து அவை இன்னும் வழங்கப்படவில்லை ஏன் இன்னும் தாமதம் கிழக்கு மாகாணத்தில் 478 தமிழ் பாடசாலைகளும் 359 முஸ்லீம் பாடசாலைகளும் 270 சிங்கள பாடசாலைகளும் மற்றும் இன ஒற்றுமையின் அடையாள சின்னமாக 01 பாடசாலை என்ற விகிதத்தில் பாடசாலைகள் அமைந்து காணப்படுகின்றன

கிழக்கு மாகாணத்தில் 292 சிங்கள மாணவர்களுக்கு ஒரு பாடசாலை,301 தமிழ் மாணவர்களுக்கு ஒரு பாடசாலை, 443 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு பாடசாலை இம்மாகாண சராசரி விகிதத்திற்கு அமைவாகவேனும் முஸ்லீம் பாடசாலைகள் அமைவதாயின் இன்னும் 102 முஸ்லீம் பாடசாலைகள் புதிதாக அமைக்கப்படவேண்டும் என்பது இங்கு கவனிக்க தக்கதாகும் 

இந்த தகவலையும் உங்கள் கல்வி அமைச்சின் தகவல்படியே நிரூபிக்கின்றது
எனவே இதில் முஸ்லிகளுக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்களும் உங்கள் நிருவாகமும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் அவ்வாறே கிழக்கு மாகாணத்தில் 855 தமிழ் மொழி மூலமான அதிபர்களும் 282 சிங்கள மொழி மூல அதிபர்களும் இருக்கின்றனர்

ஆகவே மத்திய அரசின் கல்வி அமைச்சின் பரிந்துரையின் கீழ் 200 புதிய கல்வி வலையம் உருவாக்கப்படவேண்டும் என்ற அந்த தகவலின் அடிப்படையில் குச்சவெளி பிரதேசத்திற்கான புதிய கல்வி வலையம் ஒன்றை உருவாக்குவதில் நியாயம் உள்ளது ஆசிரிய நியமனங்களின் போது இன விகிதாசாரம் பேணப்படவேணும். இன்று நல்லாட்சி அரசாங்கம் அமைத்துவிட்டு நாங்கள் இன நல்லுறவு ஐக்கியம் பற்றி பேசுகின்றோம் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பக்கச்சார்பு,பங்கீட்டில் பாகுபாடு இன ஐக்கியம் இல்லை என்று கூறிவிட்டு இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பங்கீடு இனரீதியாக பிரிக்கப்பட வேண்டும் அன்றி தொடர்ந்தும் அவை சமநிலை பேணப்படவேண்டும்
கிழக்கு மாகாணம் என்பது மூவினங்களுக்கும் சொந்தமான மாகாண யாரும் தனித்து உரிமை கோரமுடியாது
இருந்தும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய சனப்பரம்பல் அதிகம் அந்த விகிதாசாரதிக்கேற்றப மேலதிக பாடசாலைகள் 2017 உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
இவ்வாறே கடைமை நிறைவேற்று அதிபர்கள் தொடர்பாக பல தடைவை பேசி இருக்கின்றேன் குறித்த அதிபர்கள் கடந்த காலங்களில் பராமரித்து கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் அவர்களுக்கும் நல்ல நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும்
மேலும் எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கவுள்ள புதிய ஆசிரியர்களை இன விகிதாசாரத்திற்கேற்ப நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஏன் என்றால் கல்வி அமைச்சரே இந்த இன விகிதாசாரம் பற்றி பேசுவது உங்கள் வழைமை அவை சொல்லில் மாத்திரமல்லாலமல் செயலில் காட்டப்படவேண்டும்
மீள் குடியேற்றம் தொடர்பாக சில பாகுபாடும் குறைபாடும் காணப்படுகின்றது 
என்ன பிரதேசம் என்ன விகிதாசாரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது பற்றி உங்களது பாதீடு புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை ஏன் அவ்வாறு இடம்பெறவில்லை இந்த மீள் குடியேற்றத்தில் மாவட்டத்தின் முஸ்லீம் கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா சிங்கள கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா உள்ளடக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் விகிதாசாரம் என்ன இவற்றில் குறிப்பிடவில்லை இவ்வாறு எதிர்காலத்தில் உங்களது 2017 ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் மூவின மக்களும் உள்வாங்கப்படவேண்டும் குறிப்பாக முஸ்லீம் கிராமங்கள் கவனிக்கப்படவேண்டும்
யுத்தத்தால் மூன்று இனமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் அவ்வாறு தமிழ் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான பங்கீட்டை கூட்டலாம் அனால் எந்த ஒரு இனமும் புறக்கணிக்கப்படக்கூடாது
எனவே அமைச்சர் அவர்களே நான் இனரீதியாக பிரித்து பேசவில்லை எமது முஸ்லீம் சமூகமும் எம்மீது எதிர்பார்ப்பிலே வாக்களித்துள்ளார்கள் அவர்களின் அபிலாசைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது 
எவ்வாறு தங்கள் மீது தமிழ் மக்கள் வாக்களித்துவிட்டு எதிர்பார்ப்புகள் உள்ளதோ அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் அந்த உணர்வு உள்ளது
எனவே குச்சவெளி பிரதேசத்திற்கான புதிய கல்வி வலையத்தை உருவாக்குவதற்கான நியாயத்ததை என்னால் குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து பெற்றுத்தருவீர்கள் என நம்புகின்றேன்
மேற்குறித்த நியாயப்பாட்டின் அடிப்படையில் முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிகமான ஆசிரியர்கள் எதிர்காலத்தில் அதிகமாக நியமிக்கவேண்டிய பாரிய பொறுப்பு உங்கள்மீது உள்ளது அவற்றையும் சரியாக செய்வீர்கள் என நம்பிடுகின்றேன்
எனவே எதிர்வரும் 2017 ம் வருடம் சரியாக நடைமுறைப்படுத்த நீங்களும் உங்கள் கல்வி அதிகாரிகளும் செயல்ப்படவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தனது உரையில் குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.