Header Ads



25.000 ரூபாய் தண்டப்பணத்தில் மாற்றம் இல்லை - அரசாங்கம் தீர்மானம்

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த 7 குற்றச்சாட்டுகளுக்கும் சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல், இடது பக்கதால் முன் செல்தல், காப்புறுதி இல்லாமை, பாதுகாப்பற்ற ரயில் பாதைகளில் சட்டத்தை மீறுதல், சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டுவதற்கு இடமளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

2 comments:

  1. :Please verify the news before publish.

    தண்டப்பண அதிகரிப்பு யோசனையிலிருந்து 2 விடயங்கள் நீக்கம்?
    வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோர் மீதான 25,000 தண்டப்பணம் அறவிடும் யோசனையில் 2 இரண்டு விடயங்கள் தொடர்பாக ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
    இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்வது தவறு என்று போக்குவரத்து கட்டளைச் சட்டத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அது பற்றி அரசு ஆராய வேண்டியுள்ளது.
    அதேபோல், அதிக வேகம் பற்றியும் தெளிவற்றத்தன்மை காண்பபடுகிறது. வீதிகள் நவீனமயமாகியுள்ள நிலையில்,
    எந்ததெந்த வாகனங்களுக்கு எந்தெந்த பகுதிகளில் எப்படியான வேக கட்டுபாடுகளை வழங்குவது என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.
    அந்த வகையில் இவ்விரு விடயங்கள் தொடர்பில் பரிசீலக்கப்பட வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.