Header Ads



கொழும்பில் 175 பள்­ளி­வா­சல்கள், இணைந்து நிறை­வேற்­றி­ய முக்கிய தீர்மானம்

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் குர்ஆன் மற்றும் ஹதீ­ஸுக்கு முர­ணான எந்­த­வொரு திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தும் தீர்­மா­ன­மொன்­றினை கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் நிறை­வேற்­றி­யுள்­ளது. 

நேற்­றுமுன் தினம் இரவு கொழும்பு மரு­தானை ஸாஹிரா பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் கூட்­டத்­திலே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார். 

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தில் 12 பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னங்கள் அங்கம் வகிப்­ப­துடன் இவற்றில் சுமார் 175 பள்­ளி­வா­சல்கள் உள்­ள­டங்­கு­கின்­றன.

நேற்று முன்­தினம் நடை­பெற்றகூட்­டத்தில் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தைச் சேர்ந்த சுமார் 300 பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். 

கூட்­டத்தில் மேலும் நாட்டில் சம­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடும்­போக்கு பேரி­ன­வாதக் குழுக்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­துடன் பள்­ளி­வா­சல்­களின் பிர­தி­நி­திகள் அவற்றை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது பற்­றியும் ஆரா­யப்­பட்­டது. 

பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கி­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வு­களை வழங்­கு­வது பற்­றியும் ஆலோ­சிக்­கப்­பட்­டது.

தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொண்டு பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகள் பெற்றுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.  

நாட்டில் சமூ­கத்­துக்கு எதி­ரான அவ­சர நிலை­மைகள் மற்றும் பரப்­பப்­படும் பொய் வதந்­தி­களின் போது செயற்­ப­டு­வ­தற்­கென ஒவ்­வொரு பள்­ளி­வா­சலில் இருந்தும் 3 பிர­தி­நி­திகள் அடங்­கிய குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது.

புதிய அர­சியல் அமைப்பு ஆக்­கத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் பாரா­ளு­மன்ற பிர­தி­நிதித்­துவம் பாதிப்­ப­டை­யாத வகையில் கவனம் செலுத்­து­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நிகழ்வில் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் செய­லாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன், சாபிர் ஹாசிம், அஸ்லம் ஒத்மான் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.

ARA.Fareel

1 comment:

  1. இது மிகவும் வெற்றியளிக்க கூடிய ஒரு சிறந்த முயட்சியாகும் .பள்ளிவாயல்கள் நிர்வாகிகள் இவ்வாறு ஒன்றிணையும்போது எந்த விடயத்தையும் மிகவும் இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும் .மேலும் இந்த நிர்வாகிகளுக்கு சமகாலப்பிரச்சினைகள் அதட்கான இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உள்ள தீர்வுகள் போன்ற விடங்களை தொடராக அறிவு தெளிவூட்டல் செய்து வரவேண்டும் .இதன்மூலம் இறைவன் உதவியால் pala மாற்றங்களை நாம் காண முடியும் .

    ReplyDelete

Powered by Blogger.