Header Ads



அரசாங்கத்தின் தீர்மானம் பற்றி, முஸ்­லிம்கள் அதி­ருப்­தி - அமைச்சரவையில் ஹக்கீம்

அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரவூப் ஹக்கீம் தெரிவித்தவை,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர் திட்­ட­மிடல்  அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அர­சாங்கம் எடுத்­துள்ள தீர்­மானம் பற்றி முஸ்­லிம்கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்­ச­ர­வையில் உரை­யாற்­று­கையில், 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளமை முஸ்­லிம்கள் மத்­தியில் பாதிப்­பையும் எதிர்ப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­மாறு நிபந்­தனை விதித்­தி­ருப்­பது முஸ்­லிம்­களை அதி­ருப்தி கொள்ளச் செய்­துள்­ளது என்றார்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் அமைச்­ச­ரவை உப­குழு, ஏற்­கெ­னவே நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் அறிக்கை வெளி­யி­டப்­ப­டும்­வரை எந்த தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­படக் கூடாது. அந்­தக்­கு­ழுவின் அறிக்­கையின் பின்பே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

நாட்டில் மஹிந்த ராஜபக்ஷ அரசின் காலத்தில் போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.இந்தவாரம் இரண்டு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தில் தெலி­யா­கொன்­ன­யிலும், நிக­வெ­ரட்­டி­யிலும் இச்­செ­யல்கள் அரங்­கே­றி­யுள்­ளன. இச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­வ­தினால் முஸ்­லிம்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளார்கள். அர­சாங்கம் இது சம்­பந்­த­மாக உட­ன­டி­யாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இறக்­காமம் மாணிக்­க­மடு மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் அமைச்சர் ஹக்கீம் எதிர்ப்­பினைத் தெரி­வித்தார். மாணிக்­க­மடு பகு­தியில் பௌத்த குடும்பம் ஒன்­றேனும் வசிக்­காத நிலையில் அண்­மையில் புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­ப­கு­தியில் தமிழ், முஸ்லிம் மக்­களே வாழ்­கி­றார்கள். நீதி­மன்ற உத்­த­ர­வி­னையும் மீறி இந்­தச்­சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பௌத்­தர்­களே இல்­லாத இடத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளதால் அப்­ப­கு­தி­யி­லுள்ள சிறு­பான்மை மக்கள் பெரும் அச்­சத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர். எனவே இது சம்­பந்­த­மாக காலம் தாழ்த்­தாது தீர்வு காணப்­பட வேண்டும் என்றார்.

பிர­தமர் ரணி­லிடம் முறைப்­பாடு

நேற்று பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமும், மனோ கணே­சனும் மாணிக்கமடுமலையில் புத்தர்சிலை வைத்த விவகாரம் குறித்து பிரதமரிடம் முறையிட்டனர்.

நல்லாட்சியில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இச்சந்தர்ப்பத்தில் பௌத்தர்களே இல்லாத பகுதியில் சிலை வைத்திருப்பது பாரதூரமான விடயம். இந்த விடயம் உடன் தீர்வு காணப்படவேண்டும்.

புத்தர் சிலை விவகாரத்தில் அமைச்சர் தயா கமகேயே சம்பந்தப்பட்டுள்ளார். அதனால் அவர் அறிவுறுத்தப்பட வேண்டும். இதனால் உருவாகியுள்ள அசாதாரண நிலை அவருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அமைச்சர்கள் இருவரும் பிரதமரை வேண்டிக்கொண்டனர்.

2 comments:

  1. நீங்கள் இருவரும் கமென இருங்க அடுத்த தேர்தலில் நாங்கள் மக்கள் முடிவெடுப்பேரம்.

    ReplyDelete
  2. புத்தர் சிலை விவகாரதால் அரசை தர்மசங்கட நிலைக்கு தள்ளலாம் என்பதே இதைசெய்தவர்களின் நிலைப்பாடு...

    போதாக்குறைக்கு சத்திரம் அமைக்க காணிவேறு தேவயாம்

    ReplyDelete

Powered by Blogger.