Header Ads



துருக்கி, பலஸ்தீனுக்கு துரோகம் இழைத்ததா..?

-INAAS-

1 நபியவர்கள் முனாபிக்குகளின் தலைவனுக்கு ஜனாஸா தொழுகை நடாத்தினார்கள். தனது வாயில் எச்சிலை முனாபிக்குகளின் தலைவரின் வாயில் வைத்து பின்னர்  முன்னால் நின்று முனாபிக்குகளின் தலைவருக்கு தொழுகை நடாத்தினார்கள்.

2 ஒரு முறை  ஒரு யூதனின் பூதஉடல் கொண்டு செல்லப்படும் போது அதற்காக நபியவர்கள்நபியவர்கள் எழுந்து நின்றார்கள். பக்கத்திலிருந்து ஸஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ்  அது யூதன் ஒருவருடைய பிரேதம் என்றார்கள். அதற்கு நபியவர்கள் அவனும் இந்த உலகில் வாழந்த ஒரு மனிதன், ஒரு ஆன்மா தான் என்றார்கள்.

3 காபிர்கள் மக்காவை ஆட்சி செய்யும் போது ஒரு முறை மக்காவில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. மக்கா காபிர்களால் துரத்தப்பட்டு மதீனாவில் வாழ்ந்த நபியவர்கள் உடனே எல்லோரிடம் பணம் சேர்த்து அதனை அபூசுப்யானிடம் கொடுங்கள் என்று மக்காவுக்கு அனுப்பினார்கள். மக்காவில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது காபிர்களுக்கு உதவவே நபியவர்கள் அந்த பணத்தை அனுப்பியிருந்தார்கள்.

4 சாச்சாவின் நெஞ்சை பிழந்து அவரின் ஈரலை எடுத்து சப்பித் துப்பிய பெண்ணை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்.
  
5 எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த உதாரணம் உதைபியா உடன்டிக்கை. உதைபியா உடன்படிக்கையுடன் ஸஹாபாக்கள் அனைவரும் முழுமையாக அதற்கு உடன்படவில்லை.வெளிப்படையில் பார்க்கும் போது இஸ்லாத்தை தாரைவார்த்துக் கொடுப்பது போல இருந்தது

யூதர்களுடன் மாத்திரமல்ல முனாபிக்குகளுடன் கூட எந்தளவு நுணுக்கமாக மற்றும் மனிதாபிமானமாக நபியவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதனை இந்த ஹதீஸ்களுடாக நம்மால் புரிந்துகொள்ளலாம். இஸ்ரேலில் பல நகரங்களில் கடுமையான தீ பரவி வருகிறது. அதனை அணைக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளது. குறிப்பாக  துருக்கியிடமும் இஸ்ரேல் தமக்கு உதவும்படி கோரியுள்ளது.

அதனை தொடர்ந்து இஸ்ரேலுக்கு உதவ துருக்கி முன்வந்துள்ளது.  இதனால் கடுப்படைந்த பலர் துருக்கி தலைவர் அர்துகான் மீது வசைபாட துவங்கியுள்ளனர். "அர்துகான் யூத ஏஜன்ட்"  "அர்துகான் ஒரு துரோகி" என்றெல்லாம் சில அரைவேக்காட்டு உலறல்வாதிகள் உலறிக்கொண்டிருக்கின்றனர்.

நான் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களில் வரும் சம்பவங்கள்  நபிகளார் மனித உயிர்களுக்கு எந்தளவுக்கு மதிப்பளித்துள்ளார்கள். சூழலை கருத்தில் கொண்டு முனாபிக்குகளுடன் கூட எந்தளவுக்கு இறங்கிச் சென்று நுணுக்கமாக காய் நகர்தல்களை செய்துள்ளார் என்பதனை தெளிவாக உணரலாம். இப்படியான இன்னும் பல பல உதாரணங்களை சீராவிலிருந்து காட்டலாம். துருக்கி அரசை இந்த விடயத்தில் மட்டும் விமர்சிக்கும் இவர்கள் துருக்கி கடந்த 15 வருடகாலமாக செய்து வரும் சமூகப் பணியை சாதனைகளை ஒரு முறை கூட வாய் திறந்து பாராட்டியதில்லை.

இத்தனைக்கும் முஸ்லிம் நாடு என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும் ஒரேயொரு முஸ்லிம் நாடு துருக்கி தான்.

ஜரோப்பாவின் துயரம் என்றழைக்கப்பட்ட நாடு இன்று ஜரோப்பாவில் முதலிடம் வகிக்கும் நாடாக மாறியிருக்கிறது.  இதற்கு அர்துகானின் பங்களிப்பு மிகப்பிரதானமானது. எந்த முஸ்லிம் நாடும் முன்வந்து செய்யாத துருக்கியின் சமூகப் பங்களிப்புகள் சில

1. காஸா கடந்த  1 வருடத்துக்கு மேலாக இஸ்ரேலால் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
காஸாவில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு  நிலவுகிறது
காஸாவில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது
காஸாவில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது
காஸாவில் 98 வீதமான நீர் நச்சுத்தன்மையுள்ளதாக மாறியுள்ளது
2% வீதமான நீர் மட்டுமே மக்களால் குடிப்பதற்கு உகந்ததாக இருக்கிறது.
எகிப்தின் எல்லைகள் கூட தொடார்ந்து மூடப்பட்டே இருக்கிறது.
இப்படி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் பலஸ்தீன் காஸா மக்கள் பற்றி எந்த நாடும் கரிசனை செலுத்தவுமில்லை. அர்துகான் மீது வசை பாடி பத்வாக்களை அல்லி வீசும் யாரும் இதனை பற்றி  பேசவில்லை. இஸ்ரேல் குண்டு  வீசும் காலங்களில் மட்டும் தான் இவர்கள் முசுப்பாத்திக்காக பலஸ்தீன் உணர்வு கோசம் போடுவார்கள். ஆனால்  துருக்கி காஸா  மக்களின் இந்த இக்கட்டான  நிலையை புரிந்து கொண்டு பலஸ்தீன் காஸா மக்களுக்கு உதவுவதற்காக மட்டும் இஸ்ரேலுடன் முக்கிய பல ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தங்களில் முக்கிய ஷரத்தாக காஸா மீதான முற்றுகை நீக்கப்பட வேண்டும். துருக்கியிலிருந்து காஸாவுக்கு மனிதாபிமான  உதவிகளை வழங்கு இஸ்ரேல் உடன்பட வேண்டும் என இடப்பட்டது.
துருக்கியின் ஷரத்துக்களுடன் வலுக்கட்டாயமாக உடன்படிவேண்டிய நிலையில் இஸ்ரேல் உள்ளது. ஒப்பந்தம் இரத்தனால் இஸ்ரேலுக்கு பாரிய நெருக்கடியும் நஷ்டமும் ஏற்படும் நிலையில் இஸ்ரேல் இந்த ஷரத்துக்கு ஒப்புக்கொண்டது. காஸா மீதான முற்றுகை நீக்கப்பட்டது. டொன் கணக்கில் உணவுகளும் மருந்துபொருட்களும் உதவிகளும் துருக்கியால் காஸாவுக்கு அனுப்பபட்டது. துருக்கியின் உதவியுடன் இஸ்ரேலால் தரைமட்டமாக்கப்பட்ட பாடசாலைகள் வைத்திசாலைகள் வீடுகள் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன. 
(அர்துகான் மீது வசைபாடும் துருக்கியை தூற்றும் எத்தனை பேருக்கு இந்த விடயம் தெரியுமோ என்று தெரியவில்லை)

2. சில வருடங்களுக்கு முன் சோமாலியாவில் ஏற்பட்ட கடும் பஞ்ச கஷ்ட நிலைமை எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.  சபாப் என்ற ஆயுதக்குழுவுக்கு பயந்து உலகநாடுகள் சோமாலிய சென்று உதவிகளை வழங்க பின்வாங்கின. ஆனால் துருக்கி முன்வந்து துருக்கி தலைவர் முன்வந்து தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு சோமாலியா சென்று அந்த மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். பலர் வேண்டாம் என்று சொன்னாலும் சோமாலியாவில் துருக்கி தமது தூதரகத்தை அங்கு அமைத்து அவதிப்பட்ட அந்த மக்களுக்கு துருக்கி உதவியது.

3. சில வருடங்களுக்கு முன்னர் மிய்னமாரில் முஸ்லிம்கள் ஒடுக்ப்பட்டு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது நினைவிருக்கும் அந்த நேரத்திலும் மியன்மாருக்கு துருக்கி தலைவரின் பாரியாரும் வெளிநாட்டு அமைச்சரும் நேரடியாக சென்று அவர்களுக்கு கண்ணீர் சிந்தி உதவிக்கரம் நீட்டினார்கள்.
அர்துகானை பார்த்து துரோகி என்று சொல்வோரிடன் ஒரு சிறிய கேள்வி
மியன்மார் அரசின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பி வந்த படகு ஒன்று கிழக்கு மாகாணத்தை வந்தடைந்தது. உயிரையும் கொடுப்போம் என கூச்சலிடும் உங்களில் எத்தனை பேர் குறைந்தது அங்கு சென்றாவது அவர்களை பார்த்து சுகம் விசாரித்தீர்கள்.
உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது அர்துகானை பார்த்து துரோகி என்று சொல்ல.

4. சிரியா யுத்தம் உக்கிரமாக நடந்து வருகிறது அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் 20 லட்சத்தையும் விட அதிகமான அகதிகளுக்கு இன்று வரை உணவளித்து பராமரித்து வருகிறது துருக்கி.

துருக்கியின் சமூகப்பணிகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் அதில் ஒரு சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கு பதிந்துள்ளேன். அடுத்தது இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று நேற்று உருவானதல்ல. அதாதுர்க் காலத்திருலிருந்து உருவானவை. அன்றைய துருக்கியில் ஹிஜாப் அணிந்ததற்காக பெண்கள் தூக்கிலடப்பட்டார்கள். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டார்கள். ஏன் துருக்கியில் ஆண்களுக்கு தாடி வைப்பது கூட சட்டரீதியாக தடைசெய்யப்பட்டிருந்தது. அப்படி பட்ட துருக்கி தான் இன்று சர்வதேச சதிகளின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறது. 
முழுமையாக மீள இன்னும் பல காலம் எடுக்கும்.

ஒரே நாளில் நாட்டை மாற்றி மக்கள் அனைவர்களையும் மாற்ற இது ஒன்று தமிழ் சினிமா அல்ல. இது நிஜம் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இந்தப் பதிவின் நோக்கம் துருக்கி இஸ்ரேலுக்கு உதவியது மார்க்கரீதியாக பிழையானதல்ல துரோகமும் அல்ல அதனை மனிதாபிமான பணி என்ற ரீதியிலேயே பார்க்க வேண்டும். அரசியல்ரீதியாகவும் அது தவிர்க்க முடியாதது. எனபதனை உணர்த்துவதே.

நாம் இந்த நிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு துருக்கியின் வரலாற்றையும் ஓரளவுக்காவது படித்து விட்டுத்தான் துருக்கி துரோகம் செய்யததா? அல்லது சர்வதேசத்தில் இஸ்லாத்தின் முன்மாதிரியை நடைமுறைபடுத்திக் காட்டி இஸ்லாத்தை தலைநிமிரவைத்ததா? என்ற முடிவுக்கு வரவேண்டும்.

இதுவரை காலம் அர்தூகானின் முன்னெடுப்புகள் அனைத்தும் இஸ்லாத்துக்கு பெருமை தேடித் தருவதாகவே அமைந்திருக்கிறது. இதுவும் அப்படியான ஒரு முன்னெடுப்புதான். ஏற்கனவே இந்தப் பதிவு நீண்டதாகிவிட்டதாக தோன்றுகிறது. மீண்டும் சொல்கிறேன் இது துருக்கியின் பணிகளில் மிகவும் சொற்பனளவையே.

இஸ்லாம் அமைதியின் மார்க்கம், இஸ்லாம் அமைதியையே விரும்புகிறது, இஸ்லாம் யுத்தங்களை வெறுக்கும் மார்க்கம் *யுத்தமில்லாத ஒரு அமைதிப்பூங்காவாக இந்த பூமியை மாற்றவே இஸ்லாம் விரும்புகிறது.*

முழு வாழ்வும் இரத்தமும் யுத்தமும் மரணமும்தான் இஸ்லாம், என நாம் இஸ்லாத்தை தவறாக புரிந்து வைத்துள்ளோம். சமாதானம் அமைதி அன்பு என்ற இஸ்லாத்தின் அந்த உயரிய இலக்குகளை நோக்கிய பயணமாகத்தான், துருக்கியின் நிலைப்பாட்டை நான் இங்கு பார்க்கிறேன்.

13 comments:

  1. Hats off to the Turkey leader... he is following what Islam really preach us... and a good example for a true Muslim...

    ReplyDelete
  2. Hats off to the Turkey leader... he is following what Islam really preach us... and a good example for a true Muslim...

    ReplyDelete
  3. உங்களது நிலைப்பாடல்ல.அதுதான் சரியுமங்கூட.மாற்றமான விமர்சனங்களுக்குப்பின்னால் செஞ்ஞசோற்றுக்கடன் என்ற விஷயம் தொங்கி நிற்பதை நான் அவதானிக்கிறேன்.ஏனெனில் உண்மையை மறைக்க வேறு காரணங்கள் இல்லை.

    ReplyDelete
  4. exactly this is a good approach: goes with rationale not letter of texts

    ReplyDelete
  5. Humanity should restpect whatever situations!

    ReplyDelete
  6. விடயங்களை விபரமாக விளங்காத
    விசிலடிச்சான் குஞ்சுகளின் விமர்
    சனத்திற்கு, விளாசித்தள்ளிய
    விளக்கமிது . இது போன்று
    இன்னும் எமது நாட்டின் விட்டு
    கொடுப்புக்குமாக விளக்கங்கள்
    தேவை , எழுதுங்கள் உறவே!

    ReplyDelete
  7. I respect the Turkey President, They the leaders know why they start connection with ISRAEL..and Why they sometimes CUT connection.
    As in The hadees mentioned above... Muhammed (sal) has kept connection with JEWS too.
    Alhamdulillah at last some GROUPs agree for this kind of connection by Muslim leaders with ISRAEL to be with positive look.

    I also remind the same supporting groups, when some ARAB nations keep diplomatic connection with ISRAEL, why you behaved double standard? Did not you get the same hadees at that time ?

    Please, with due respect approach every one with same scale.

    May Allah Bless Brother Edorgan in bringing the Turkey back to Islamic way of life from currently prevailing corruptions such as

    1. Alcohol shops in public
    2. Night clubs in public
    3. Girsl and Boys hugging and kissing in public
    4. Disliking HIJAB and BEARD in public
    5. Music openly

    can list a lot .. and TURKEY has to change a lot from all these corruptions Before we consider it to be a LEADING MUSLIM country.

    May Allah Open our eyes to welcome SAUDI in which all above are officially followed as per ISLAMIC law. BUT some of us for no valuable reason, hate this MORE islamic land.

    Ya Allah guide us to be JUSTFUL in our statement, actions and speech.

    ReplyDelete
  8. ize vidayththa SAUDI senjeedha Heading vera vizamahavum.. AAivu thalai keelahavum vantheekum.. vry gd job sir.

    ReplyDelete
  9. Tactical move. If u cant kick kiss the hand. Erdogan is an outstanding leader of the century.

    ReplyDelete
  10. Who is "Jamaludeen Afghani", His aqeeda, His manhaj? Was he following the way of Ahlus Sunnah ? Did he have any connection to SHIA belief ? Did he try to promote UNITY of religions ( Try to unit Islam, christianity and Judaism )? Please search about the Historically land marked person "Jamaludeen Afghani.

    May Allah Guide is to love GOOD people and stay away from who deviated the path of Shahabaa (ral), who stood exactly on the the path of Muhammed (sal)

    ReplyDelete
  11. If u followed my comments , u would have got clear picture of me where i stand on whch essue. Iam proud to b a Sunni Alhamdulilkah . I dont need to dwell on it .Dont crack our head about Sunni / Shia conflict. Instead Let's focuss what's discussed .

    ReplyDelete

Powered by Blogger.