Header Ads



பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர் மீது, பன்றி இறைச்சி வீச்சு

பிரித்தானியாவில் இரண்டு மர்ம நபர்கள் மசூதிக்குள் நுழைந்து தொழுகும் இடத்திலும் ஒரு முஸ்லிம் நபர் மீதும் பன்றி இறைச்சியை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Piotr Czak-Zukowski, Mateusz Pawlikowski ஆகியோரே குறித்த இரக்கமற்ற குற்றத்தில் ஈடுபட்டனர் என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 2ம் திகதி வடக்கு லண்டனில் Crowndale சாலையில் உள்ள அல்-ஏ. ஆர். ரகுமான் மசூதியில் நுழைந்த இருவரும், தொழுதுக் கொண்டிருந்த நபர் மீது பன்றி இறைச்சியை வீசியுள்ளனர்.

பின்னர் தொழுகும் இடத்திலும் பன்றி இறைச்சியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தகவலறிந்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் மசூதிக்கு அருகிலேயே 22 வயதான Pawlikowski சிக்கியுள்ளார்.

இதைதொடர்ந்து, நடந்த தேடுதல் வேட்டையில் Brent Cross பகுதியில் வைத்து 28 வயதான Czak-Zukowski கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது, அவரின் சட்டை பையில் பன்றி இறைச்சி வைத்திருந்த காலி பாக்கெட் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், Blackfriars Crown நீதிமன்றம் இருவருக்கும் எட்டு மாத சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

1 comment:

  1. reminding the Prophets PBUH efforts to introduce islam to qurysh people . After that all we know that ISLAM conquered the hearts of deans all over the world. So this go on a happen to Europe too Insha Allah...!!!! those places will be the focal point of ISLAM in next couple of decades.

    ReplyDelete

Powered by Blogger.