Header Ads



பிரான்ஸில் 30 ஆம் திகதி, யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் - Jaffna Muslim Community - International ஏற்பாடு

யாழ்ப்பாண முஸ்லிம்கள் பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 26 வருடங்கள் நிறைவடைவதையிட்டு சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பு JMC - I ஏற்பாடு செய்துள்ள மாபெரும் ஒன்றுகூடல் எதிர்வரும் 30 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிஸ், கனடா, ஜேர்மனி, பெல்ஜியம், சுவீடன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்த ஒன்றுகூடலில் உணர்வு ரீதியாக பங்கேற்கவுள்ளார்கள்.

இந்த ஒன்றுகூடலின் போது, யாழ்ப்பாண முஸ்லிம்களின் சர்வதேச அமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்படுவதுடன், அதற்காக வெளிநாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவும் பெற்றுக்கொள்ளப்படும். இன்ஷா அல்லாஹ்.

தொடர்புகளுக்கு

Ramlan Abdul majeed 0033652164159

javamil 0033650677744

Jaffna Muslim Community - International அங்கத்துவம் பெற விரும்புகிறீர்களா..?

யாழ்ப்பாண முஸ்லிம்களை உணர்வு ரீதியாக இணைப்பதே இதன் அடிப்படை நோக்கம்.

யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே அரசியல், சமூக, பெருளாதார, கல்வி விடயங்களில் செல்வாக்குச் செலுத்த, இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படும்.

இலங்கைக்கு வெளியே வாழும், அத்தனை யாழ்ப்பாண முஸ்லிம்களும் இதில் அங்கத்துவம் வகிக்கமுடியும்.

அங்கத்தவராக இணைபவர் தாம் வதியும் அல்லது தொழில்புரியும் நாட்டின் தம்மால் முடிந்த பணத்தை அன்பளிப்பாக வழங்கி இணையமுடியும்

இவ்வாறு பெறப்படும் பணம், யாழ்ப்பாண முஸ்லிம்களின் பைத்துல்மால் என அழைக்கப்படும் பொது நிதியத்தில் வைப்புச் செய்யப்படும்.

இந்த நிதி, யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும்.

இந்த அமைப்பு பிரான்ஸில் பதிவு செய்யபட்டிருக்கும். அந்நாட்டு சட்டங்களுக்கு ஏற்ப ஒரு நிழல் நிர்வாகம் ஸ்த்தாபிக்கப்படும்.

எனினும் எல்லா நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு மசூறா சபை ஏற்படுத்தப்படும். அந்த மசூறா சபையே இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளும்.

மேற்சொன்ன இந்த அமைப்பில் என்னையும் உணர்வு ரீதியாக இணைத்துக்கொள்வதுடன், யாழ்ப்பாண முஸ்லிம்களின் அத்தனை மேம்பாட்டுக்காகவும் தியாகத்துடன் செயற்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

பெயர்
தந்தையின் பெயர்.
இலங்கையின் முகவரி
வெளிநாட்டு முகவரி
பிறந்த திகதி
ஈமெயில் முகவரி
கையடக்கத் தொலைபேசி இல
கையொப்பம்

Welcome to Jaffna Muslim Community -International (JMC-I)

Our mission is:

1 To foster goodwill and friendship amongst Jaffna Muslim diaspora, facilitating unity and peaceful coexistence.

2 To facilitate humanitarian assistance to Jaffna, Sri Lanka.

3 To safeguard the interest of the Jaffna Muslims and the members of Jaffna Muslim Community International.

4 To participate and initiate projects and events that would serve for mutual understanding among Sri Lankan communities and promote peace.

5 To activate projects and events that would serve to integrate internally displaced Jaffna Muslims and other communities in Sri Lanka.

6 Disseminate facts and information to members and non-member regarding the issues related to the Jaffna Muslim community of Sri Lanka. Alhamdulillah, we have a team of very active and striving members. We invite all Jaffna muslims living outside Sri Lanka to be a part of this international organization to reach our goals.

Register your mebership with JMC international:

At present, any Jaffna Muslim (born in Jaffna/ have/had parents born in Jaffna) can become member of our organization.

Simply send us an E-mail with information of, Your full name, date of birth, your contact details and Country of domicile.

jaffnamuslimcommunity.in@hotmail.com

4 comments:

  1. வரவேற்க வேண்டிய நல்ல விடயங்களை செய்து வரும் நம் சகோதரர்களுக்கு அல்லாஹ் நேர் வலியை காட்ட வேண்டும்.
    அத்தோடு எனது சிறிய வேண்டுகோள்:மேற்கத்திய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதாவது யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய ஊர்களை சேர்ந்த நம் சகோதரர்களில் நலன் விரும்பிகள் அதிகமாக உள்ளனர் அவர்களையும் இதில் உதவுனர்களாக,ஆலோசகர்களாக,பங்குதார்களாக சேர்த்துக்கொண்டால் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும்.என்பது எனது தாழ்மையான மஷூரா.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்க வேண்டிய நல்ல விடயங்களை செய்து வரும் நம் சகோதரர்களுக்கு அல்லாஹ் நேர் வலியை காட்ட வேண்டும்.
      அத்தோடு எனது சிறிய வேண்டுகோள்:மேற்கத்திய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதாவது யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய ஊர்களை சேர்ந்த நம் சகோதரர்களில் நலன் விரும்பிகள் அதிகமாக உள்ளனர் அவர்களையும் இதில் உதவுனர்களாக,ஆலோசகர்களாக,பங்குதார்களாக சேர்த்துக்கொண்டால் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும்.என்பது எனது தாழ்மையான மஷூரா. வடபுலமுஸ்லீம்களின் குறிப்பாக யாழ்.கிளிநொச்சி முஸலீம்களின் விடயமாக காத்திரமான மன்னெடுப்புக்களையும் ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கயுள்ளோம் அடுத்த கட்டமாக இலங்கை வரவுள்ள ரீட்டா ஜஷாக அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுததூள்ளோம்.இன்னும் காலத்தின் தேவை கருதி காத்திரமான முன்னெடுப்பு திட்டஙகளை முன்வைத்து செயற்படுகின்றோம்.இன்ஷா அல்லாஹ் எமமமவர் யாவரினதும் இத்தூய முயற்சிகளை பொருந்திக்கொள்வானாக.ஆமீன் எமது இபபுனித பயணம் ஒரு தூரநோககுடனான பயணமாக இருக்க வலையமைப்பு ரீதியான செயற்பாடுகள் அவசியம்தேவை எனவே இவ்வாறான முன்னெடு்ப்புக்களை முன்னெடுப்போம் ஒன்றிணைவோம் செயற்பட வருமாறு பரந்துபட்டு வாழும் எமது சகோதர அமைப்புக்களையும் தன்னார்வு அமைப்புக்களையும் தனிநபர சமூக சேவகர்களையும் கல்விபப்ல விறபனனர்களையும் இளைஞர்குழுக்களையும் கண்ணியமிகக மௌலவிமார்களையும் தாயிகளையும் அன்பாக அழைத்து ஒருங்கிணைத்து செயற்ப இறை ஆசிகள் ஆமீன

      Delete
  2. இவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக. ஆமீன்

    ReplyDelete
  3. I make a humble appeal to our brothers of Jaffna. Brothers, we are all united by Kalima laailaha Illallah. We,in the eastern, are your brothers. We have been left alone without anyone to raise voice for
    us. Please widen the boundary of your movement and include us in it too. We are here to make contributions and subscription.

    This is an important time for Muslims. Tamil diaspora speak for their people in north and east provinces. If you give up us, there is none who could help us on this earth ( other than the almighty).

    ReplyDelete

Powered by Blogger.