Header Ads



பொலிஸ்மா அதிபருடன், நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் - 0718592020



காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் அது குறித்து நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் என காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள், 0718592020  என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு இது பற்றிய முறைப்பாடுகளை செய்ய முடியும் என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் மிகவும் அவசரமான நிலைமைகள் இருந்தால் தம்மை தொடர்பு கொண்டு அவற்றை அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சின்ன சின்ன முறைப்பாடுகள் காவல்துறையினரால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பிற்கு தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பதிலளிப்பார் எனவும், அவர் தமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Inspector General of Police Pujith Jayasundara today gave out his private mobile number for the public to call him if the police fail to respond to  a serious complaint.

Jayasundara said that the public can contact him on 0718592020 if they feel there is something serious which the police department has failed to address.

“If there is only something urgent and important call me and you will get a response. Not a small matter and not something the police can look into. Call me if the police are corrupt or if the police fail to respond to something very serious,” he said.

Jayasundara said that his personal security officer will answer the telephone call and pass it to him.

The IGP said that the police department will take steps to ensure 70 percent of pending investigations on criminal matters are resolved by the end of this year.

He urged the police department to be considerate towards the concerns raised by the public and address those concerns. (Colombo Gazette)

1 comment:

Powered by Blogger.