Header Adsதமிழர்களின் நிலப்பசிக்கு, முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் - நல்லாட்சியிடம் கோரிக்கை

வட‌க்கில் நடாத்தப்பட்ட எழுக‌ த‌மிழ் நிகழ்வில் வடக்கையும் கிழக்கையும் இணைகக வேண்டும் என்ற கோரிக்கை கண்டிக்கத்தக்கதும் கிழக்கு முஸ்லிம்களின் தாயகத்தை கபளீகரம் செய்யும் முயற்சியுமாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொங்கு த‌மிழுட‌ன் வீழ்ச்சி பெற்ற‌ த‌மிழ் ம‌க்க‌ளின் உரிமை‌க்கோஷ‌ம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த‌ அர‌சில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள‌து. த‌மிழ் ம‌க்க‌ள் த‌ம‌து நியாயமான உரிமைக‌ளுக்காக‌ ஜன‌நாய‌க‌ரீதியாக‌ போராட‌லாம் என்பதை உலமா கட்சி மறுக்கவில்லை.  ஆனால் இந்த‌ எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வில் கிழ‌க்கையும் வடக்கையும் இணைக்க‌ வேண்டும் என‌ கோஷ‌ம் எழுப்பிய‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும். காரணம் கிழக்கு மாகாணம் தனியொரு இனத்துக்குரியதல்ல என்பது மட்டுமல்ல இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென இருக்கின்ற ஒரேயொரு தாயகபூமியாக கிழக்கு மாகாணம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒரு தலைப்பட்சமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தி அவர்களின் உரிமையில் கை வைக்கும் மோசமான நடவடிக்கையாகும்.

யுத்தம் முடிவுற்ற பின் சிங்கள பேரினவாதம் சிறு பான்மை மக்களுக்கெதிராக பல இன்னல்களை கொடுத்து மஹிந்த அரசை வீழ்த்த சதி செய்த போது இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் சகல உரிமைகளும் பெறும் நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் முஸ்லிம்களில் 98 வீதமானோர் இணைந்து இந்த அரசை கொண்டு வந்தனர். இந்த நல்லாட்சியில் கிடைத்த ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்வதாகவே இக்கோஷம் அமைந்துள்ளது.

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று எழுக தமிழ் கூறுவது போல் வடக்கையும் கிழக்கையும் எக்காரணம் கொண்டும் இணைக்கக்கூடாது என்ற எழுக கிழக்கு முஸ்லிம் என்ற கிழக்குப்புரட்சி கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தோன்றுவதற்கும் மேற்படி எழுக கோஷம் வழி அமைத்துள்ளது. இதற்குரிய முயற்சிக்கான விழிப்பூட்டலை உலமா கட்சி கிழக்கில் ஆரம்பித்துள்ளது. எழுக தமிழ் கோரிக்கை எதிர் காலத்தில் பாரிய தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை தோற்றுவிக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்குரிய முழு பொறுப்பையும் எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.

த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ர‌ணில் அர‌சு எத‌னையும் கொடுக்க‌ட்டும். வடக்கை மட்டும் பிரித்து தமிழ் ஈழம் கொடுத்தாலும் அது எமக்கு பிரச்சினையே இல்லை. ஆனாலும் அப்படி தமிழ் ஈழம் கொடுத்தாலும் வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு தனியான சுயாட்சி கொடுத்து விட்டுத்தான் ரணிலின் அரசாங்கம் தமிழ் ஈழம் வழங்க வேண்டும் என்றுதான் நாம் கூறுவோம்.

ஆகவே தமிழ் மக்களின் உரிமைகளை இந்த அரசு வழங்க வேண்டும் என்பதற்காக கிழ‌க்கு முஸ்லிம்க‌ளையும் அவ‌ர்க‌ளின் தாய‌க‌ பூமியையும் தாரை வார்ப்ப‌தை ஒரு போதும் நாம் அனும‌திக்க‌ மாட்டோம். தமிழ் மக்களின் நிலப்பசிக்கு முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் என நல்லாட்சி அரசிடம் வேண்டுகிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்காரணம் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

7 comments:

 1. நிலப்பசி யாருக்கு!!
  கிழக்குகில் சனத்ததொகை அடி படையில் முஸ்லீம்களும் தமிழர்களும் 50000சனத்தொகை வித்தியாசம்.ஆனால் கிழக்கில் நிலஅடிப்படையில் தமிழர், சிங்களவர்களுக்கும் அடுத்து 3வது இடமே மூஸ்லும்களுக்கு.மறவாதே உலமா.

  ReplyDelete
 2. வெறும்சனத்தொகையைவைத்து மட்டும் தாயகம் சுயநிர்நயம் அங்கிகரிக்க படுவதில்லை நிலப்பரப்பு ரொம்ப முக்கியம்.

  ReplyDelete
 3. Population also one of the factor

  Why can not accept 2 provinces for Tamil speaking people ?

  ReplyDelete
  Replies
  1. Kilakkula population-tamil:609,584 muslim:569,182

   Delete
 4. உலமா போன்ற அடிப்படைவாத முஸ்ஸம்களால் தான் இலங்கை மட்டுமல்ல, உலகின் பலநாடுகளிலும் குழப்பங்கள் தீர்கபடமுடியாமல் உள்ளது.

  ReplyDelete
 5. We muslims saved tamils arms groups from Sri Lanka military in east many time.but in return they killed muslims , we have lot of evidence

  ReplyDelete
 6. uyiraikkodothavathu vada kilakkai enaya vidamaddom

  ReplyDelete

Powered by Blogger.