Header Ads



என் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், துருக்கி திரும்பி தண்டனை அனுபவிக்க தயார்


துருக்கி ஆட்சி கவிழ்ப்பு குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன் வலியுறுத்தியுள்ளார்.

துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் கடந்த மாதம் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி துருக்கி அரசிடம் ஒப்படைக்குமாறு அதிபர் எர்டோகன் கூறி வருகிறார். 

இந்நிலையில், துருக்கி ஆட்சி கவிழ்ப்பு குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில் குலன் எழுதியுள்ளார். அதில் துருக்கி அரசு அவர் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

அதில், ”தன்னிச்சையான சர்வதேச ஆணையம் அமைத்து ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார். என் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் துருக்கி திரும்பி தண்டனைகளை அனுபவிக்க தயார்” என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.