Header Ads



மேற்குலகம் ஏன், அர்துகானை விரும்புவதில்லை..?

-Musthafa Ansar-

தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்த அர்துகான் 52 % பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 2014 இல் ஜனாதிபதியாகினார். ஜூலை 15 இல் தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து ஒருபோதும் இல்லாத அளவு ஆதரவை அதிகரித்துக்கொண்டார். 

அர்துகான் தொடர்பாக தொடர்ந்து  மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பிரச்சாரம் சம்பந்தமாக குழம்பிப்போய் இருந்த துர்க்கியர்கள், அது அர்துகான் மீதும் துர்க்கி மீதும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பதைப் புரிந்துகொண்டனர். 

சதிப்புரட்சியைத் தொடர்ந்து மேற்குலகம் அர்துகான் மேலும் பலம்பெருவார் என்று கவலைப்பட்டார்களே தவிர சதிப்புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. 

மேற்குலகம் அர்துகானை அச்சுறுத்தலாகக் கருதுகின்றது, ஆனால் துர்க்கி மக்கள் அவரை தமது தலைவராகப் பார்க்கவே விரும்புகின்றனர். அர்துகானின் தலைமைத்துவத்தில் துர்க்கி பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.  

அர்துகான் ஏன் மேற்கின் வெறுப்புக்கு உட்பட்டார்?

துர்க்கி பத்திரிக்கை ஒன்றுடனான ஒரு நேர்காணலில், அர்துகான் தொடர்பான மேற்குலகின் நிலைப்பாட்டை துர்க்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் இவ்வாறு முன்வைக்கிறார். 

"வாஷிங்டன் அர்துகானை விரும்புவதில்லை. அவர் ஐரோப்பாவிலும் விரும்பப்படுவதில்லை." 

"அவர் சர்வாதிகாரியாகவே பார்க்கப்படுகின்றார். மேலும் அவர் தமது நலன்களுக்கு எதிரானவராகவே கருதப்படுகின்றார்."

"அர்துகானுக்கு முன் மேற்கு பல சர்வாதிகாரிகளுடன் தொடர்புவைத்திருந்தது, வைத்திருக்கிறது. சவுதியரும், எகிப்தியரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எம்முடன் இணங்கிச் செல்கின்றனர். எங்களது பெறுமானங்களை மதித்து செயற்படுவார்கள்."

ஆனால் அர்துகான் எங்களை எதிர்க்கின்றார். எங்களது முரண்பாடுகளை எங்கள் முகத்தில் வீசி எறிகிறார். அவர் நற்புக்கொள்ள முயற்சிப்பதில்லை. அதேநேரம், அவரைவிட மோசமான சர்வாதிகாரிகள் எங்களுடன் நெருங்கிய உறவு வைப்பதை பிரச்சினையாகக் கருதுவதில்லை. ரஷ்யா ஜனாதிபதி கூட அண்மைக்காலம் வரை அப்படித்தான் செயற்பட்டார். 

"ஆகவே, அர்துகான் வாஷிங்டனில் விரும்பப்படிவதில்லை." 

ஏன் மேற்கு அர்துகானை விரும்புவதில்லை என்பதை அமெரிக்க முன்னால் தூதுவர் Jeffrey இன் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

துர்க்கியுடனான மேற்கின் பிரச்சினை, ஜனநாயகம், மனிதவுரிமை அல்லது சுதந்திரம் தொடர்பானதல்ல. அது மேற்குக்கெதிரான  அர்துகானின் நடத்தை தான் என்பது தெளிவாகின்றது. 

அவர் மேற்கின் காலடியில் மண்டியிடுவதில்லை. 
அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று அவர் கருதுவதில்லை.
அவர்களின் பணியாளராக அவர் செயற்படுவதுமில்லை. 
அவர்களை சமமானவர்கலாகவே கருதுகின்றார். 

மேற்குக்கு தலைவணங்காததால் அர்துகான் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார் என்றால் அது மேற்கின் நயவஞ்சகத்தையும், தவறான என்னத்தையுமே காட்டுகிறது. 

4 comments:

  1. Your really correct musthafa ansar .america israly europ saudi egypt all are friend for destroy democratic muslim country because saudy king help to hand over the democratic morshi egypt country for army sisi

    ReplyDelete
  2. ஏர்பகான் ஒன்றும் சர்வதிகாரி இல்லை சவுதி மற்றும் எகிப்துதான் சர்வதிகாரி

    ReplyDelete
  3. மேற்கின் காலடியில் மண்டியிடாமல் அல்லாஹ்விடம் மாத்திரமே மண்டியிடும் அவரே, தனது நாட்டில் இறுதியாக இருந்த இஸ்லாமியக் கிலாபத்தை மீள உயிர்ப்பிக்கும் ஆற்றலும் உள்ளவர்.

    அவரது கரங்களை வலுப்படுத்துவது முஸ்லிம்களின் கடமை.

    ReplyDelete
  4. அவரை சர்வாதிகாரியாகக் காட்டி அவரை வீழ்த்த சதி செய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.