IS தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 2000 பேர் விடுவிப்பு
சிரியாவின் மன்பிஜ் நகரில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய 2 ஆயிரம் குடியிருப்புவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வாரக்கணக்கில் நடைபெற்று வந்த மோதல்களுக்குப் பிறகு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்து இன மற்றும் அரேபிய ஆயுதப் படையினரால் மன்பிஜ் நகரம் கைப்பற்றப்பட்டது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் தப்பியோடுகையில் குடிமக்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதால் அவர்களை இலக்கு வைத்து தாக்குதவது கடினமாகியது.
ஆனால், அந்த மக்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் விரட்டப்பட்டதை மன்பிஜ் நகரிலுள்ள குடியிருப்புவாசிகள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தியதால் வளர்த்திருந்த தாடியை ஆண்கள் மழிப்பது, பெண்கள் முகத்தை மூடும் துணிகளை தீயிட்டு எரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. BBC


Ellam ninkathan terror
ReplyDeleteEllam.ninkathan.terror.
ReplyDelete