மைத்திரியை பழிவாங்குவதே, மஹிந்தவின் நோக்கம் - UNP
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என்றும், அவரின் தற்போதைய தேவை மைத்திரிபால் சிறிசேன ஜனாதிபதியை பழிவாங்குவதே என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார கூறினார்.
இன்று -01- சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
சரத் பொன்சேகா கட்சியில் இணைந்து கொண்டமையானது கட்சிக்கு பலமாகும் என்றும் கூறினார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பாதைகள் அமைப்பதாக கூறி தேசிய சேமிப்பு வங்கியிடம் பெற்றுக் கொண்ட 28 பில்லியன் ரூபா கடன் தொகையில் வேறு வேலைகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த நிதியை பெற்றுக் கொண்ட முறை எப்படி? எந்த திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்டது? என்பன பற்றி பொருளாதார குழு மற்றும் பிரதமரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார கூறினார்.

Post a Comment