மஹியங்கனையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை, உடன் பலப்படுத்த கோரிக்கை
கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை நகரில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றில் ஞானசார தேரர் ஆற்றிய உரையையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் பீதிக்குள்ளாகியுள்ளதால் அங்குள்ள பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் ஹலீம் தான் நேரில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவைச் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் மஹியங்கனையில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் சகவாழ்வுக்கும் அரசு உறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹியங்கனைப் பகுதி முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையெனவும் கூறினார்.
முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் என்ற வகையில் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்வது தனது கடமை என்றும் அரசு இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
மஹியங்கனையில் முஸ்லிம் இளைஞர்கள் கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று பௌத்தகொடியினை எரித்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உ ருவாகியுள்ள அச்சநிலை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இத்தகவலை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் மஹியங்கனை பகுதியிலுள்ள முஸ்லிம் கிராமங்களான பங்கரகம்மன, ரோஹன மற்றும் தம்பகொல்ல பகுதிகளிலுள்ள பள்ளி வாசல்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உடன்பட்டுள்ளார்.
முஸ்லிம் இளைஞர்கள் இன நல்லுறவைப் பேணுவதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். தாம் செய்யும் தவறுகளால் பாரிய விளைவுகள் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.
கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று மஹியங்கனை பன்சலையில் பௌத்த குரு ஒருவர் ஆற்றிய மார்க்க பிரசங்கத்தின் போது முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துவெளியிட்டதால் ஆத்திரமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த கொடியினை எரித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பங்கரகம்மனையைச் சேர்ந்த 8 முஸ்லிம் இளைஞர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டின் கீழ் இரு பெரும்பான்மை இனத்தவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கட்டு சிங்கப் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது
ReplyDelete