Header Ads



'யாரும் குழப்பமடையத் தேவையில்லை'

'ஒவ்வொரு முடிவையும் அரசாங்கம், நின்று நிதானமாகவே எடுக்கின்றது. இது, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் போன்றதோர் அரசாங்கமல்ல. யாரும் குழப்பமடையத் தேவையில்லை' என்று தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, 'இந்த அரசாங்கம், மைத்திரி மற்றும் ரணிலின் அப்பாவி அரசாங்கமாகும்' என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

'நாமும் இருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம் பற்றி யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை, இது அப்பாவி அரசாங்கமாகும், மஹிந்தவின் ஆட்சியைப் போல குழப்பமடையத் தேவையில்லை.

அரச கடன் தொடர்பிலான விவரங்கள், அறிக்கைகளில் இல்லை. மத்திய வங்கியில் பற்றாக்குறை ஏற்பட்டால், திறைச்சேரியின் ஊடாகவே பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், மஹிந்தவின் ஆட்சியின் போது, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட வங்கிகளிடமிருந்தே கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால், அவைத்தொடர்பில், மத்திய வங்கியின் கணக்கில் இல்லை' என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.