Header Ads



மதீனாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தானை சேர்ந்தவன்

சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமியர்களின் புனித தலங்களில் முக்கியமான ஒன்றான மதினாவில், மஸ்ஜித் அல் நபவி அருகே தற்கொலைப்படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. பார்க்கிங் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.

“12 ஆண்டுகளுக்கு முன் சவுதிக்கு வந்து டிரைவராக வேலை செய்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் இந்த தாக்குதலை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் பெயர் அப்துல்லா கல்சார் கான் (வயது 34) என்பதும், ஜெட்டாவில் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது” என உள்துறை அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் கடற்கரை நகரமான ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகிலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு போலீசார் காயமடைந்தனர்.

3 comments:

  1. இவ்வாறான மூலை குறைந்த ஜீவராசிகளால் அப்பாவி பாகிஸ்தானிய ஏழைகளும் நாட்டை விட்டும் போகும் நிலைப்பாடு தோன்றியுள்ளது

    ReplyDelete
  2. Please do correction on the news. Bomber that news mentioned involved in Jeddah bombing. Madinah covert bomber will identify soon as local reports statements.

    ReplyDelete
  3. Eid Mubarak to all the readers.

    ReplyDelete

Powered by Blogger.