Header Ads



பிக்குகள் எதிர்ப்பு, பொரலஸ்கமுவ பள்ளிவாசல் நிர்மாணத்திற்கு தடை - நுகே­கொடை நீதிமன்றம் உத்தரவு

-விடிவெள்ளி -ARA.Fareel-

பொர­லஸ்­க­முவ ஜும்ஆ பள்­ளி­வா­சலில் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக கட்­டட நிர்­மா­ணங்­களை அகற்­று­மாறு நுகே­கொடை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­த­தை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் அதற்­கெ­தி­ராக மேன்­மு­றை­யீடு செய்­துள்­ளது.

பொர­லஸ்­க­முவ ஜும்ஆ பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்புப் பணிகள் பொர­லஸ்­க­முவ நகர சபை­யி­ட­மி­ருந்து அனு­மதி பெறப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதற்கு அப்­ப­கு­தியைச் சேர்ந்த பௌத்த குரு­மார்கள் எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து நகர சபை முதல்வர் வழங்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்கும் புறம்­பாக விஸ்­த­ரிப்பு பணிகள் நடை­பெ­று­வ­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கு எதி­ராக நுகே­கொடை நீதிவான் நீதி­மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை வழக்கு விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது நுகே­கொடை மேல­திக நீதிவான் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்கு புறம்­பாக நிர்­மாணம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் அதனை அகற்­று­மாறு உத்­த­ர­விட்டார்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான RRT யின் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் பொர­லஸ்­க­முவ நகர சபைத் தலை­வ­ருக்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு எதி­ராக சட்ட விரோத நிர்­மாணம் எனத் தெரி­வித்து வழக்குத் தொடர்­வ­தற்கு அதிகாரமில்லை எனக் கூறினார்.

கட்டட விஸ்தரிப்புக்கு சட்ட ரீதியான அனுமதி பெறப்பட்டுள்ளதெனவும் கூறினார். அதனால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதென்றார்.

No comments

Powered by Blogger.